Article by : Admin on 05-05-2021
தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகர் வட்டாரத்தில் நடிகர் பாண்டுவிற்கு என்று தனி மகத்துவம் உள்ளது. 19.02.1947 ல் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்தார் பாண்டு (வயது 74) மாணவன் படத்திலும், சிரித்து வாழ வேண்டும் படத்திலும் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். ஆனால் தனது சகோதரர் (இடிச்சபுளி செல்வராஜூ) நடித்த கரையெல்லாம் செண்பகப்பூ படத்தில் முக்கிய பாத்திரத்தில் தன் நடிப்பை தொடர்ந்தார். நடிகர்களிலேயே தனது முகப்பாவத்திலேயே நகைச்சுவையை வெளிப்படுத்திய நடிகர். அதனாலே நடிகர் பாண்டு என்றாலே அவரது முகபாவம் மட்டுமே அனைவரின் இதயத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்று.
நடிப்போடு வரைகலையிலும் சிறந்து விளங்கியவர் திரு பாண்டு அவர்கள். மறைந்த முதல்வர் திரு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் புதிதாக அதிமுக கட்சி தொடங்கியபோது கட்சிக்கான சின்னத்தை வடிவமைக்க திரு பாண்டு அவர்களிடம் கூற அவர் வடிவமைத்த சின்னமே அதிமுக கட்சியில் தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் அடையாள சின்னத்தையும் அவர் வடிவமைத்துள்ளார்.
கட்சி சார்பற்று அனைவராலும் விரும்பப்பட்ட திரு பாண்டு அவர்கள் ஏறக்குறைய அனைத்து முன்னனி நடிகர்களது படங்களிலும் நடித்துள்ளார்.
பல்வேறு படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து அனைவர் மனதில் இடம்பிடித்த நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை (06.05.2021) இயற்கை எய்தினார். அவரை ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு சினிடாக்(CINITALK) குழுவினர் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரித்துக்கொள்கிறோம்.
அவரது மனைவியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவர் நலம்பெற பிரார்த்திக்கிறோம்.
மாணவன் திரைப்படத்தில் திரையுலக மாணவனாக தொடங்கிய அவரது திரைப்பயணம் இந்த நிலை மாறும் என்ற படத்துடன் இந்த நிலை மாறும் என்ற கணவுகளுடன் கரைந்து போனது.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.