Join/Follow with Our Social Media Links

மெகா ஸ்டார் சீரஞ்சீவி பிறந்த நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..

Article by : Admin on 21-08-2021

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என்ற பன்முக கொண்டவர். தெலுங்கு திரையுலகில் மட்டுமல்ல தமிழிலும் இவருக்கென்று ரசிகர்கள் என்று சொல்வதைவிட வெறியர்கள் அதிகம் இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இன்று 22.08.2021 பிறந்த நாள் காணும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவிப்பதுடன் அவரின் வாழ்கை பயனத்தின் சிறு தொகுப்புடன் அவரது ரசிகர்கள் ஒருவராக சினிடாக் குழுமம் இந்த கட்டுரை பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கின்றது.

நடிகர் சிரஞ்சீவி 22.08.1955 ல் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள மொகலத்தூர் கிராமத்திள் பிறந்தவர்.  இவர். நிடதவோலு, குரசாலா, பாபட்லா, பொன்னூர், மங்களகிரி மற்றும் மொகல்தூர் ல் தன் பள்ளிப்படிப்பை முடித்தார். 1970 ல் நடந்த சுதந்திரதின அணிவகுப்பில் NCC கேடட் சார்பில் பங்கேற்றார். நரசபுரத்தில் உள்ள Sri.Y.N கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்த இவர். நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மெட்ராஸ் ஃபிலிம் இண்ஸ்டிடுயூட் ல் நடிப்பு பட்டம் வென்றார்.

 

1978 ல் வெளியான பிரணம் கரீது என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் இதுவரை 152 படங்கள் நடித்துள்ளார். இவர் கே.பாலசந்தர் இயக்கிய 47 நாட்கள் என்ற தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகள் ஒரே நேரத்தில் வெளியானது. இதுவே இவர் நடித்த முதல் தமிழ் படம். இதன் பிறகு S.P.முத்துராமன் இயக்கிய ரஜினிகாந்த கதாநாயகனாக நடித்த ராணுவ வீரன் திரைப்படத்தில் மிரட்டலான நக்சல் தீவிரவாதியாக நடித்திருப்பார். அதே போல் ரஜினிகாந்த நடித்த மாப்பிள்ளை படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் நட்புக்காக கௌரவத்தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்த சிரஞ்சீவி படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் தமிழிலும் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இவர் 2008 ல் பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி ஆந்திராவில் தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் பிரஜா ராஜ்ஜியம் கட்சி மொத்தமுள்ள 294 தொகுதியில் 18 தொகுதியில் வென்றது. திருப்பதி மற்றும் பாலகொல்லு தொகுதியில் போட்டியிட்ட இவர் திருப்பதி தொகுதியில் வென்றார். 2011 ல் இவரது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். 2012 ல் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றார். ஆந்திரா மற்றும் தெலுங்கனா மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் வந்த தேர்தலில் மக்களின் எதிர் மனநிலை காரணமாக ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 2014 க்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி மீண்டும் திரைப்பயனத்தில் தன் தீவிர கவணத்தை செலுத்த தொடங்கினார்.

2017 ல் வெளியான கைதி நம்பர் 150 படம் (தமிழ் கத்தி பட ரீமேக்) ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து வெளியான சைரா நரசிம்ஹா ரெட்டி சரித்திர திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இப்போது நடிகர் மற்றும் மகன் ராம் சரண் நடிக்கும்ஆச்சார்யா என்ற படத்தில் ஆச்சார்யாவாக சிரஞ்சீவி நடித்துள்ளார்.

ஹனுமான் ஜங்கஷன் என்ற தெலுங்குபடம் மூலம் இயக்குனராக அறிமுகமனவர் மோகன் ராஜா. தன் சகோதரர் ரவியை வைத்து ஜெயம் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கினார். பின் குமரன் சன் ஆஃப் மஹாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம் தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற சூப்பர்ஹிட் தமிழ்ப்படங்களை இயக்கினார்.

மோகன் ராஜாவின் சூப்பர் ஹிட் படம் தனி ஒருவன் தெலுங்கு பட ரீமேக்கான துருவ் படத்தில் சிரஞ்சீவி மகன் ராம் சரண் நடித்தார்.

இயக்குனர் மோகன் ராஜாவின் 2001 ல் ஹனுமான் ஜங்கஷன் தெலுங்கு படம் வெளியானது. 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தெலுங்கு படத்தை இயக்கும் மோகன் ராஜா மெகா ஸ்டார் சிரஞ்சீவி Chiru 153 படத்தின் மூலம் இணைகின்றார்.

ரசிகர்களுக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிறந்த நாள் பரிசாக Chiru 153 படத்தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று (21.08.2021) வெளியிட்டது. காட்ஃபாதர்(GODFATHER) என்று இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் முரளி கோபி எழுத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான் சூப்பர் ஹிட் திரைப்படம் லூசிஃபர்.  வித்தியாசமான அரசியல் கதையில் உருவான இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் படம் தான் இந்த காட்ஃபாதர்(GODFATHER)

காட்ஃபாதர்(GODFATHER) படத்தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களை பெரிது மகிழ்வித்துள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

காட்ஃபாதர், Godfather Movie, Chiranjeevi, சிரஞ்சீவி, Chiranjeevi Birthday, Happy Birthday Chiranjeevi

காட்ஃபாதர், Godfather Movie, Chiranjeevi, சிரஞ்சீவி, Chiranjeevi Birthday, Happy Birthday Chiranjeevi

காட்ஃபாதர், Godfather Movie, Chiranjeevi, சிரஞ்சீவி, Chiranjeevi Birthday, Happy Birthday Chiranjeevi

காட்ஃபாதர், Godfather Movie, Chiranjeevi, சிரஞ்சீவி, Chiranjeevi Birthday, Happy Birthday Chiranjeevi

காட்ஃபாதர், Godfather Movie, Chiranjeevi, சிரஞ்சீவி, Chiranjeevi Birthday, Happy Birthday Chiranjeevi

Movie Gallery

 • news

  Sheela Rajkumar

 • news

  Sanjitha Shetty

 • news

  Gayathri

 • news

  Saipriya Deva

 • news

  Vedhika

 • news

  Amala Paul

 • news

  Varalaxmi Sarathkumar

 • news

  Tamannah

 • news

  Kangana Ranaut

 • news

  Sunny Leone

 • news

  Sakshi Agarwal

 • news

  Navya Nair

 • news

  Sadha

 • news

  Sanghavi

 • news

  Meera Jasmine