Join/Follow with Our Social Media Links

நவரசா 9-கதைகள் 9-திரைவிமர்சனம் பகுதி-2 (4 முதல் 6 பாகம்)

Article by : Admin on 10-08-2021

நவரசா வெப்சீரிஸ் ஆந்தாலஜி எனப்படும் ஒன்பது குறும்பட தொகுப்பாக வெளியாகியுள்ளது. இதை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் குயூப் சினிமா டெக்னாலஜிஸ் சார்பில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேஷன் தயாரித்துள்ளார்கள். ஒன்பது இயக்குனர்கள், ஒன்பது கதைகள், ஒன்பது இசையமைப்பாளர்கள் தங்கள் பங்களிப்பை ஒன்பது தொடர்களுக்கு கொடுத்துள்ளனர்.

நவரசா வெப்சீரிஸ் 06.08.2021 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகின்றது.

ஒன்பது பகுதிகளின் திரைவிமர்சனம் ஒன்றன் பின் ஒன்றாக பிரித்தும் மொத்த அடிப்படையிலும்

இந்த வெப்தொடர் கொரேனா பெருந்தொற்றினால் ஊரடங்கு காரணமாக வாழ்வாதரம் இழந்து தவிக்கும் திரையுலக தொழிலாளர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒன்று.

நான்காம் பாகம்

4) பாயாசம் (தமிழ்)- బిభత్స -(தெலுங்கு)- Disgust (ஆங்கிலம்)

வசந்த் S சாய் இயக்கியுள்ள இந்த வெப்தொடர் பகுதிக்கு கதை எழுதியிருப்பவர் T.ஜாணகிராமன், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். E.சங்கத்தமிழன் படத்தை தொகுத்துள்ளார்

டில்லி கணேஷ் (சமாநந்து), ரோகினி (வலம்பாள்),, அதீதி பாலன் (பாக்கியலக்ஷ்மி (எ) பாக்கியம்), பகவதி பெருமாள் (தலைமை சமையல்காரன்), கத்தாடி ராமமூர்த்தி (உதவி சமையல்காரன்), குமார் நடராஜன் (சுப்பராயன்), கார்திக் கிருஷ்ணா CS (நடராஜன்) மற்றும் பலர் நடித்துள்ளனர்

கதைக்கரு:

வெறுப்பு என்ற குணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட தொடர். வெறுப்பு என்ற குணம் ஒரு மனிதனை எந்த ஒரு இழிவான செயலுக்கு அழைத்து செல்லும் என்பதை சொல்லியிருக்கும் கதை.

கதை::

சமாநந்து என்ற பெயர் யாருக்குமே தெரியாத ஒன்று. ஆனால் சுப்பராயன் சித்தப்பா என்றால் தெரியும். இங்கே சமாநந்துக்கு பெருமையில்லை சுப்பராயன் என்ற பெயரால் தான் சமாநந்து என்ற கதாப்பத்திரம் அடையாளப்படுத்தப்படுகின்றது. சுப்பராயன் சமாநந்துவின் அண்ணன் மகன். சமாநந்துவின் மனைவி வலம்பாள். சுப்பராய்னை வளர்த்து படிக்க வைத்தது அவர் சித்தப்பா. ஒரு கட்டத்தில் பணமில்லாத காரணத்தால் சுப்பராயனை படிக்க வைக்க முடியமால் படிப்படை நிறுத்தினார். ஆனால் தன் சொந்த உழைப்பாள் மிகப்பெரிய அளவு தொழிலில் வெற்றி பெற்று ஊரில் அனைவரும் மதிக்கும் நபராக மாறினார். சமநாந்துவின் அண்ணன் மகன் சுப்பராயன் என்ற நிலைமாறி சுப்பராயன் சித்தப்பா சமாநந்து என்ற நிலை உருவகியது.

சமாநந்து, வலம்பாளுக்கு நடராஜன் என்ற மகனும் பாக்கியலக்ஷ்மி (எ) பாக்கியம் என்ற மகளும் இருக்கின்றனர். நடராஜன் சுப்பராயனிடம் பணியில் இருக்கின்றான். பாக்கியம் கல்யாணமான மூன்றே மாதத்தில் கணவனை இழந்த கைம்பெண்.

சுப்பராயனுக்கு ஏழு மகள் இருக்கின்றனர். அவரது மகள்களுக்கு எளிதாக மாப்பிள்ளை கிடைத்து திருமணம் பிரமாண்டமாக திருமணம் செய்கின்றார். ஆனால் தன் ஒரே மகளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு மாப்பிளை பார்த்து கல்யாணம் முடித்தும் துரதிஷ்ட வசமாக கணவனை இழந்து இருப்பதால் வேதனையில் இருக்கின்றார் சமாநந்து. சுப்பராயன் அதீத வளர்ச்சி அவர் தொட்டதெல்லாம் துலங்குவது போன்ற விஷயங்கள் சித்தப்பாவிற்கு (சமாநந்துவிற்கு) பொறமைகொள்ள சொல்கின்றது. வலம்பாள் இந்த பொறாமை குணத்தை கைவிட சொல்கின்றாள். ஆனால் அது சமாநந்துவின் ரத்ததில் கலந்து இறுகி போயிருந்தது.

திருமண விஷேசங்களில் சிறப்பே பருப்பு பாயசம். அதன் பின்னனியில் ஒரு கதையிருக்கின்றது. பருப்பு பாயசம் என்பதில் வெல்லம், கடலை பருப்பு மற்றும் பயத்தம் பருப்பால் செய்யப்படுவது. கடலை பருப்பு கடினத்தன்மை கொண்டது, பயத்தம் பருப்பு மென்மையானது. இந்த இரண்டும் நன்றாக வெந்து கரைந்து வெல்லத்துடம் இணைவது போல் தான் வாழ்கை என்பது என்ற தத்துவமே பாயாசத்தின் அடிப்படை.

எதர்த்தாமன சிறு சிறு விஷயங்கள் கூட சமாநந்துவின் பொறமையை தூண்டிவிடுகின்றது. மங்கல்ய நாண் பூணும் நேரத்தில் அனைவரும் மணமேடையை நோக்கி செல்கின்றனர். சமையல்காரர்கள் உட்பட. தன் பொறாமை குணத்தால் தான் தனித்துவிடப்பட்டதை போல் உணர்ந்த சமாநந்து(சித்தப்பா) சமையல் கூடத்தில் தனியாக சென்று கொண்டிருக்கின்றார். பாயச பாத்திரத்தில் கையை சுட்டுக்கொள்கின்றார். தன் பொறாமை குணத்தால் பாயாசத்தை கீழே கொட்டிவிடுகின்றார். இதை பார்த்த அவர் மகள் முகத்தை சுழிக்கின்றாள். பாயாசத்தில் எலி விழுந்து செத்து கிடந்த காரணத்தால் பாயாசத்தை கீழே கொட்டினேன் என்று பொய்யுரைக்கின்றார்.

பாராட்டுக்குறியவை:

அனைவரும் மகிழ்சியாக இருக்கும் தருணத்தை காட்டியிருக்கும் இயக்குனர். ஒரு நபரரின் பொறாமை அடிப்படையை அழகாக காட்டியிருக்கின்றார் இயக்குனர்.

ஒட்டு மொத்த கதையின் பாராத்தையும் நடிகர் டில்லி கணேஷ் தலையில் சுமத்தியுள்ளார் இயக்குனர். ஆனால் கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அழகாக நடித்திருக்கின்றார்.

ஒரு திருமணவைபோகத்தை பின்னனியாக வைத்து அதையும் அழகாக காட்டி திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.

நெருடலானவை:

பொறாமை என்ற குணத்தை சொல்லியுள்ள இயக்குனர். அதன் எதிர்விணையை சரியாக பதிவு செய்யவில்லை என்றே சொல்லலாம்.

பாயசம் என்று தலைப்பு வைத்த காரணத்தால் பொறாமையின் உச்சத்தை பாயாசத்தை தட்டி விடுவது போல் காட்சியமைத்து அதுதான் பொறாமை உச்சம் என்று காட்டியுள்ளார். இது தான் உச்சமா?

பொறாமை என்ற குணத்தின் உச்சத்தை காட்ட இந்த தொடரை எடுக்கவில்லை. பொறாமை குணத்தின் அடிப்படையை காட்டவே இந்த தொடர் என்றால் அதில் சுவராஸ்மே இல்லையே

தொகுப்பு:

பாயாசத்தில் தித்திப்பு என்பதை தேட வேண்டியிருக்கின்றது. பாயாசத்தை ருசிக்க காத்திருந்த நாவிற்கு பாயாசம் என்ற பெயரை சொல்லி எதையாவாது கொடுத்தால் அதை பாயாசம் என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

ஐந்தாம் பாகம்

5) பீஸ் (தமிழ்)- శాంత -(தெலுங்கு)- Peace (ஆங்கிலம்)

கார்திக் சுப்ராஜ் இயக்கியுள்ள இந்த வெப்தொடர் பகுதிக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தை தொகுத்துள்ளார்

பாபி சிம்ஹா (நிலவன்), கவுதம் வசுதேவ் மேனன் (மாஸ்டர்), விது, மாஸ்டர் தருன் (சிறுவன்), மற்றும் சனத் (சேரன்) நடித்துள்ளனர்

கதைக்கரு:

அமைதி என்ற அடிப்படையை கொண்டு போர்க்களத்தில் அமைதி என்ற கோணத்தில் உருவாகியிருக்கும் தொடர்

கதை::

இலங்கை போர்க்களத்தில் ராணுவத்திற்கும் போராளிகளுக்குமிடையிலான யுத்த களத்தில் போராளிகள் நிலவன், மாஸ்டர், சேரன் போன்றவர்கள் தடுப்பரன் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது அங்கே ஒரு சிறுவன் வந்து தன் தம்பி வெள்ளையன் ராணுவத்தினர் ஆக்கிரமிப்பு பகுதியில் மாட்டியிருப்பதாகவும் அவனை காப்பாற்றுமாறும் கேட்கின்றான். பிறர் தடுத்தும் நிலவன் வெள்ளையனை மீட்க போவதாக சொல்கின்றான். ஆனால் மாஸ்டர் சேரன் மற்றும் பிற போராளிகளை சமதானம் செய்து ஒத்துக்கொள்ள வைக்கின்றான்.

ராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிக்கு செல்லும் நிலவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது. அங்கே காப்பாற்ற சென்றிருப்பது ஒரு நாயை என்பதை உணர்ந்து அதிர்ச்சியாகின்றான். சிறுவன் நாயை தன் தம்பி என்று சொன்னதை நினைத்து அதிர்ச்சியடைகின்றான். ஆனால் நாயும் ஒரு உயிர்தான் என்ற அடிப்படையில் காப்பாற்றி திரும்பும் போது குண்டடிப்பட்டு கிடக்கின்றான். ஆனால் அவன் நாயை காப்பாற்ற கைகளை தூக்கி சரணைடைய முயல்கின்றான். ராணுவத்தினர் துப்பாக்கி சூட்டை நிறுத்துகின்றனர். நாயை காப்பாற்றி தன் தடுப்பரணுக்கு வருகின்றான். அவனை நாயையை சூடாமல் இருந்த ராணுவத்திற்கு நன்றி சொல்ல தடுப்பரனில் இருந்து வெளிப்படும் அவனை ராணுவத்தினர் சுட்டு கொல்கின்றனர்.

பாராட்டுக்குறியவை:

பின்னனி இசை போர்களத்தின் உணர்வை மனதில் நிலைநிறுத்துகின்றது.

எதிராளிகளை கேமராவில் கொண்டுவரமால் எதிராளிகள் இருப்பதை போன்ற பிரமிப்பை ஏற்படுத்திய இயக்குனரை பாரட்டாலாம்

போர்களத்தை களமாக கொண்ட கதையில் போர்களத்தின் உணர்வை குறைவான கதாப்பாத்திரங்களை கொண்டு வந்துள்ளர்.

நெருடலானவை:

அமைதி என்ற அடிபப்டை கொண்டு உருவாக்கிய கதையில் அடிப்படை கருவை எங்கேயும் சரியாக வலியுருத்தவில்லை.

கதாப்பாத்திரங்களின் பங்களிப்புகள் செயற்கைதனமா இருப்பது போல உணர முடிகின்றது.

ஒரு குழந்தையை காப்பாற்ற சென்ற போராளி காப்பாற்றபோவது நாயை என்று திருப்பத்தை கொடுப்பதாக நினைத்துக்கொண்டு கதையை சொதப்பி வைத்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

அமைதி என்ற அழகான கருவிற்கு கதைக்களம் ஏராளமாக இருக்கும் போது இப்படியொரு கதைக்களம் சரியான தேர்வா என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.

தொகுப்பு:

Peace பகுதியில் Peace இல்லை. பின்னனி இசைக்காகவும் காட்சியமைப்புக்காகவும் ரசிக்கலாம். கதை லாஜிக் என்பதையெல்லாம் துளியும் எதிர்பார்க்காமல் பார்க்கலாம்.

ஆறாம் பாகம்

6) ரௌத்திரம் (தமிழ்)- రౌద్ర-(தெலுங்கு)- Anger (ஆங்கிலம்)

அர்விந்த்சாமி இயக்கியுள்ள இந்த வெப்தொடர் பகுதிக்கு கதை எழுதியிருப்பவர் செல்வா மற்றும் அரவிந்த்சாமி, A.R.ரஹ்மான் இசையமைத்துள்ளார்,. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சாரங்க் படத்தை தொகுத்துள்ளார். மதன் கார்க்கி மற்றும் செல்வா வசனம் எழுதியுள்ளனர்.

ரித்விகா (போலிஸ் அதிகாரி அன்பு),, ஸ்ரீ ராம் (அருள்), அபிநாயஸ்ரீ, ரமேஷ் திலக் (அருள்), அழகம்பெருமாள் (கணேஷ்), கீதா கைலாசம் (அருள் மற்றும் அன்புவின் அம்மா) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு:

ரௌத்ரம் கோபம் வெறுப்பை அடிப்படையாக உருவாகியிருக்கும் தொடர். வெறுப்பு மற்றும் கோபம் என்பதில் பல அடிப்படை உள்ளது.  அவற்றில் சில நொடியில் கரைந்து போகும் அடிப்படை, வெகு காலம் அழியாமல் இருப்பது, வெகுகாலம் இருந்தாலும் கடைசி காலத்தில் மனதிலிருந்து விலகும் அடிப்படையிலானது.

கதை::

கணேஷ் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலுக்கும் கந்துவட்டிக்காரர். அருள் அவரை சுத்தியால் அடிக்கின்றான்.

அருள் குடும்பம் அழகான குடும்பம் அன்பான அம்மா, தங்கை அன்பு.. அருள் தந்தை கடன் தொல்லையால் ஒடிப்போனவர். ஏழமையில் வசிக்கும் அவர்கள் குடும்ப வருமானம் அருள் அம்மா வீட்டு வேலை செய்து அதில் வரும் வருவாய். அந்த வருவாய் அவர்களின் தேவைக்கு போதவில்லை. அதனால் கணேஷிடம் கடன் வாங்குகின்றாள். கடனுக்கு வட்டி கொடுக்கமுடியாத காரணத்தால் கணேஷிற்கு ஆசைநாயகியாக மாற வேண்டி நிர்பந்ததிற்கு உள்ளாகின்றாள். இதை பார்த்த அருள் கணேஷை கொல்கின்றான். அன்பு தாய் மீது வெறுப்பு கொள்கின்றாள்.

பாராட்டுக்குறியவை:

ஒரு கதையை இரட்டை கதை அடிப்படையில் எங்கேயும் யூகிக்க முடியாத அளவில் திரைக்கதை அமைத்து நகர்த்தியுள்ளனர்.

ரௌத்ரம் என்பதை முகபாவத்தில் அழகாக வெளிப்படுத்தி அருள் கதாப்பாத்திரத்திற்கு உரு கொடுத்துள்ளார். ஸ்ரீராம்,

போலிஸ் கதாப்பாத்திரத்தில் ரித்விகா அருமையாக அமைத்திருக்கின்றார். திரைக்கதை திருப்பத்திற்கு பெரிதும் உதவியுள்ளார்.

ரௌத்ரம் என்பதில் ஒரு அடிப்படையௌ ஸ்ரீராம் உணர்த்தியிருந்தாலும் மற்றொரு பரிமணத்தை ரித்விகா கதாப்பாத்திரத்தின் மூலம் கொண்டுவந்துள்ளனர்.

ஒளிப்பதிவு என்பது மிகவும் பாராட்டுக்குறிய ஒன்றாக இருக்கின்றது. சென்னையின் அழகை புதிய பரிணாமத்தில் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர்.

நெருடலானவை:

வசனங்களில் எதார்த்தத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக முகத்தை சுழிக்கும் அடிபடையிலான சில வசனங்கள்

கடனுக்காக தன்னையே கொடுத்த தாயின் முகப்பாவங்களில் அதற்குறிய ஒரு பதற்ற அறிகுறியோ குற்ற உணர்வையோ எங்கும் வெளிப்படுவது போன்ற காட்சியமைப்புகளில் இல்லை. அதை காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

தொகுப்பு:

வித்தியாசமான திரைக்கதை. அனைவராலும் ரசிக்கும் படியான கதை அமைப்பு ஒரு கதைக்கு இரட்டை அடிப்படை என்ற புதுயுக்தி அருமை.







2 BHK Flat For Sale in Chennai
2 BHK Flat For Sale in Chennai
Explore verified 2 BHK Flat For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/2-bhk-flat-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Sanghavi

  • news

    Gouri G Kishan

  • news

    Krithi Shetty

  • news

    Karthika Nair

  • news

    Iswarya Menon

  • news

    Sadha

  • news

    Vani Bhojan

  • news

    Megha Akash

  • news

    Rajisha Vijayan

  • news

    Anupama Parameswaran

  • news

    Priya Varrier

  • news

    Anupama Parameswaran

  • news

    Shraddha Srinath

  • news

    Puvisha Manoharan

  • news

    Anu Emmanuel

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.