Join/Follow with Our Social Media Links

கடைசி விவசாயி ஒடிடி ரீலீஸ் தேதி…

Article by : Admin on 18-08-2021

டிரைபல் ஆர்ட்ஸ் புரொடெக்ஷன் சார்பில் காக்கமுட்டை M.மணிகண்டன் தயாரித்து எழுதி ஒளிப்பதிவு செய்தி இயக்கியுள்ள படம் கடைசி விவசாயி. இசைஞானி இளையராஜா மற்றும் ரிச்சர்ட் ஹார்வி இசையமைத்துள்ளனர். B.அஜீத் குமார் படத்தை தொகுத்துள்ளார்.

காக்கா முட்டை படத்தை இயக்கி மணிகண்டன் அதன் பிறகு இயக்கிய குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய அளவு வெற்றிபெறவில்லை. இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருக்கும் வேளாண்துறையை அடிப்படையாக கொண்டு உருவாக்கியுள்ள படம் கடைசி விவசாயி. பல திரைப்படங்கள் விவசாய பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு உருவாகிக்கொண்டு இருக்கும் சூழலில் வெளிவரவிருக்கும் படம் கடைசி விவசாயி. பெரும்பாலும் திரைப்படங்கள் வேளாண்துறையில் உள்ள பிரச்சனைகளை சொல்லும் படம் உருவாகிக்கொண்டு தான் இருக்கின்றது. தீர்வுகளின் அடிப்படையில் படம் எதுவும் இது உருவாகியிருப்பதாக தெரியவில்லை.

நாட்டின் தற்போதைய சூழலில் இந்த திரைப்படமும் வேளாண்மை துறையில் உள்ளவர்கள் வலியை உணர்த்தும் அடிப்படையில் இருக்கும் என்றே தோன்றுகின்றது. மக்களின் உணர்வோடும் கலக்கும் என்றே தெரிகின்றது.

நல்லாண்டி என்ற விவசாயி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார், இவருடன் விஜய சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார், யோகி பாபு, முனீஸ்வரன், காளி முத்து, சாப்ளின் சுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வெகுகாலமாக ரிலீஸிற்கு காத்திருக்கும் இந்த படத்திற்கு சோனிலிவ் ஒடிடி தளம் உதவுகின்றது. கொராணா ஊரடங்கு காரணமாக திரையில் வெளியிடமுடியாத சூழலில் ஒடிடி தளங்களே திரைதுறையினருக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கின்றது. அந்த அடிப்படையில் கடைசி விவசாயி திரைப்படமும் சோனி லிவ் ஒடிடி தளத்தில் செப்டம்பர் 2021 ல் வெளியாகும் என்ற தகவலை உறுதி செய்துள்ளனர். அனேகமாக விநாயகர் சதுர்த்தி தினமான 10.09.2021 ல் இந்த திரைப்படம் சோனிலிவ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.





Movie Gallery

  • news

    Sakshi Agarwal

  • news

    Rithika Singh

  • news

    Samantha

  • news

    Kajal Agarwal

  • news

    Madonna Sebastian

  • news

    Aishwarya Rai

  • news

    Gayathri

  • news

    Shriya Sharma

  • news

    Adah Sharma

  • news

    Rajisha Vijayan

  • news

    Vimala Raman

  • news

    Sai Dhanshika

  • news

    Priya Bhavani Shankar

  • news

    Anupama Parameswaran

  • news

    Vega Tamotia

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.