Article by : Admin on 23-08-2021
விப்ரி மோஷன் பிக்ஸர்ஸ், கர்மா மீடியா அண்டு எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ஜீ ஸ்டுடியோ சார்பில் விஷ்ணுவர்த்தன் இந்தூரி மற்றும் ஷைலேஷ் R சிங்க் இணைந்து தயாரிக்க AL விஜய் இயக்கியுள்ள படம் தலைவி. மதன் கார்கி வசனம் எழுதியுள்ளார்., G.V.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி மற்றும் பல்லு ஷலுஜா படத்தை தொகுத்துள்ளனர்.
ஜெ.ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள பயோபிக் படமாக தலைவி உருவாகியுள்ளது. தமிழில் தம் தூம் படத்தில் நடித்து பாலிவுட்டில் முன்னனி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். அர்விந்தசாமி - M.G.ராமசந்திரன் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். நாசர் -கலைஞர் கருணாநிதி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். பாக்யாஸ்ரீ - சந்தியா கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். சமுத்திரகனி - R.M.வீரப்பன் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். மதுபாலா - V.N.ஜாணகி ராமசந்திரன் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். ஜிசு சென்குப்தா - சோபன்பாபு கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். தம்பி ராமையா - M.நடராஜன் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். பூர்ணா - V.K.சசிகலா கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். ஃப்ளோரா ஜோசப் - இந்திரா காந்தி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்கள் மட்டுமின்றி பரத் ரெட்டி, வித்யா பிரதீப், சண்முகராஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள தலைவி திரைப்படம் பல்வேறு பிரச்சனை காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. இறுதியாக 23.04.2021 ல் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்த சூழலில் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு சூழல் காரணமாக இதன் வெளியீடு தள்ளிப்போனது. இந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற வதந்தி உலவியது. ஆனால் படக்குழுவோ தலைவி படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று அறிவித்தது. ஊரடங்கு தளர்வின் அடிப்படையில்23.08.2021 முதல் தமிழகத்தில் திரையரங்குகள் 50% இருக்கையுடன் திறக்க தமிழக அரசு அணுமதித்துள்ளது. ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலுங்கானவில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகவிருக்கும் இந்த படம் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக இதன் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் அர்விந்தசாமி தலைவி திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான 10.09.2021 ல் திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#Thalaivi releasing in theatres on September 10th. #KanganaRanaut #Vijay @vishinduri @ShaaileshRSingh @BrindaPrasad1 @neeta_lulla #HiteshThakkar @urstirumalreddy #RajatArora #BhushanKumar @KarmaMediaent @TSeries @vibri_media @ZeeStudios_ #SprintFilms #GothicEntertainment pic.twitter.com/WdEuGxPxGf
— arvind swami (@thearvindswami) August 23, 2021
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.