செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் T D ராஜா தயாரித்துள்ள படம் ராஜவம்சம். K V கதிர்வேலு எழுதி இயக்கியுள்ளார். சாம் C S இசையமைத்துள்ளார். சாண்டி மற்றும் தஸ்தா ஒளிப்பதிவு செய்துள்ளனர். சாபு ஜோசப் படத்தை தொகுத்துள்ளார்.
ராஜவம்சம் படத்தில் M சசிகுமார் மாய கண்ணன் எனும் கண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நிக்கி கல்ராணி காயத்திரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜயகுமார் கண்ணனின் தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சுமித்ரா கண்ணனின் தாயாக நடித்துள்ளார். தம்பி ராமையா கல்யாண சுந்தரம் கதாப்பாத்திரத்தில் கண்ணனின் தாய்மாமாவாக நடித்துள்ளார். சதீஷ் கண்ணனின் தோழனாகவும் அவருடன் பணிபுரிபவராகவும் நடித்துள்ளார். ஜெயபிராகாஷ் கண்ணன் வேலை செய்யும் மென்பொருள் நிறுவண அதிபர் சிவநேசன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ராதாரவி, மனோபாலா, O A K சுந்தர். ராஜ்கபூர், மனோபாலா, சிங்கம் புலி, சாம்ஸ், யோகி பாபு, நமோ நாராயணா, ரேகா, நிரோஷா என்று நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
கதைக்கரு.:
கூட்டுக்குடும்ப பாசப்பிணைப்பு அதிலுள்ள மகிழ்ச்சி என்ற அடிப்படையில் கதையை உருக்கியுள்ளனர்.
கதை.:
டேனியல் பாஸ்கரன் K C S குரூப் ஆஃப் கம்பெணி நிர்வாகி. உமேஷ் பண்டாரி மேப்ரோ டெக்னாலஜிஸ் நிர்வாக இயக்குனர். ராக் லைன் பிரபாகர் பியர்ல் இன்ஃபோடெக் நிர்வாகி. சிவநேசன் V C L டெக்னாலஜி நிர்வாகி. இந்த நான்கு நிறுவனங்கள் தான் முதல் நான்கு இடத்திலிருகும் மென்பொருள் நிறுவனங்கள். விஷ்ணு பத்மனாபன் A A C மீடியா நிர்வாகி. விஷ்ணு பத்மனாபன் புவி வெப்பமயமாவதை தடுக்க ரூபாய் 5000 கோடி பணத்தை செலவிட உள்ளதாக சொல்கிறார். அதற்கான திட்டவரைவுகளை கொடுக்க முதல் நான்கு நிறுவனங்களிடமும் சொல்கின்றார். எந்த நிறுவனத்தின் திட்டம் அவருக்கு பிடிக்கிறதோ அந்த நிறுவனத்திற்கு இந்த ப்ராஜெக்ட்டை கொடுப்பதாக சொல்கிறார்.
நான்கு நிறுவனங்களும் சேர்ந்து இதை செய்யலாம் அதன் மூலம் அந்த பணத்தை கைப்பற்றலாமென்று சொல்கின்றனர். ஆனால் சிவநேசன் உண்மையில் இந்த பணத்தை அந்த திட்டத்திற்கு பயன்படுத்த விரும்புகின்றார். அது மட்டுமின்றி இப்போது தான் சந்தையில் அவர் வளர்ந்து கொண்டிருப்பதால் இந்த ப்ராஜெக்ட் கம்பெனிக்கு கிடைத்தால் மேலும் நற்பெயரை கொடுக்குமென்ற காரணத்தால் தனியாகவே அவர் செயல்படப்போவதாக சொல்கிறார். சிவநேசன் கம்பெனி குறுகிய காலத்தில் 50வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு வந்தது. அதற்கு அடிப்படை சென்னையிலுள்ள அவர் கிளை ஊழியர்கள் தான். அதனால் இதற்கான திட்டத்தை வகுக்க சென்னை கிளையிலிருக்கும் மாயகண்ணன் எனும் கண்ணனிடம் ஒப்படைக்கின்றனர்.
கண்ணனை அந்த ப்ராஜெக்ட்டை சமர்ப்பிக்க விடாமல் முதல் மூன்று நிறுவன நிர்வாகிகளும் தடுக்க முயல்கின்றனர். தடைகளை தாண்டி அவர்களது ப்ராஜெக்ட்டை சமர்ப்பித்து அதை கைப்பற்றுகின்றனர். 90 நாட்களுக்குள் இந்த ப்ராஜெக்ட்டை முடிக்க வேண்டுமென்று சொல்கின்றனர்.
சென்னை கிளை மேலாளர் கண்ணனிடம் காயத்திரி என்ற பெண்ணை அறிமுகப்படுத்துகின்றார். அந்த பெண்ணை துணைக்கு வைத்துக்கொள்ள சொல்கிறார். ஆனால் கண்ணன் இந்த ப்ராஜெக்ட் மிகவும் முக்கியமான ஒன்று இதற்கு நம்பிக்கையானவர்களை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். புதிதாக யாரையும் நம்பி வைத்துக்கொள்ள முடியாது என்று சொல்கிறான்.
கண்ணனுக்கு திருமணம் நிச்சயம் செய்வதாக போன் வருகிறது. கண்ணன் போன் பேட்டரி இல்லாததால் பேசமுடியாமல் போகின்றது. அலுவலகம் உள்ளே நுழைகின்றார் கண்ணன் அப்போது செக்யூரிட்டிக்கு அவனது தந்தையிடமிருந்து போன் மூலம் நிச்சயம் பற்றி தகவல் வருகின்றது. அலுவலகம் உள்ளே நுழையும் போது அனைத்து ஊழியர்களின் போன் வழியே அவனது உறவினர் ஒவ்வொருவரும் போன் செய்கின்றனர். கண்ணன் தோழன் சதீஷ் இதைப்பற்றி கேட்கின்றான். அவனுக்கு புகைப்படத்தின் மூலம் தன் பெரிய குடும்பத்தை அறிமுகப்படுத்துகின்றான். பெரிய குடும்பம் என்றால் ஜமீன் குடும்பமோ, நாட்டாமை குடும்பமோ அல்ல. 42 நபர்களுடன் ஒரே வீட்டில் வசிக்கும் கூட்டு குடும்பம். 5 சகோதரர்கள் அவர்களது மனைவிகள். 5 சகோதரிகள் அவர்களது கணவர்கள். அவர்களின் குழந்தைகள் மற்றும் கண்ணனுக்கு திருமணம் முடிந்தால்தான் தான் முடியை வெட்டுவதாக சொல்லும் தாய்மாமா கல்யாண சுந்தரம் உட்ப்பட அந்த குடும்பத்தில் 42 உறுப்பினர்கள். கண்ணனின் மிகப்பெரிய கூட்டுகுடும்பத்தை பார்த்து பயப்படும் பெண்கள் அனைவரும் கண்ணனை திருமணம் செய்துகொள்ள மறுக்கின்றனர். அதே நேரம் அவர்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் ராதாரவி தன் இரு பெண்களையும் திருமணம் செய்துகொள்ளுமாறு கண்ணனை வற்புறுத்துகிறார். ஆனால் கண்ணன் குடும்பத்தினர் மறுக்கின்றனர். இந்த சூழலில்தான் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்வது உறுதி செய்யப்படுகிறது.
கண்ணனை கிளை மேலாளர் கூப்பிடுகிறார். 90நாட்களில் முடிக்க வேண்டிய ப்ராஜெக்ட் நேரத்தை 30நாட்களாக குறைத்துவிட்டார்கள் என்று சொல்கின்றார். அதே நேரம் இன்னொரு அதிர்ச்சியையும் சந்திக்கின்றார். கண்ணனுடன் வேலை செய்யும் பெண் அவனை சந்தித்து உங்களுக்கு நிச்சயம் செய்துள்ள பெண் நான்தான். அவள் தன் தாய்மாமாவை காதலிப்பதாகவும் எப்படியாவது இந்த நிச்சயதார்த்தை தடுத்து நிறுத்துமாறும் சொல்கின்றாள்.
30 நாட்களில் ப்ராஜெக்ட்டை முடிக்க வேண்டும். அதே வேலை கல்யாண நிச்சயதார்த்ததையும் தடுக்க வேண்டும். என்ன செய்வது என்று தோழன் சதீஷிடம் கேட்கின்றான். சதீஷ் நீ யாராவது ஒரு பெண்ணை காதலிப்பதாக உன் குடும்பத்திடம் சொல் என்று யோசனை சொல்கின்றான். காதலியாக நடிப்பதற்கு பல பெண்களிடம் பேசுகின்றனர். அனைவரும் மறுக்கின்றனர். அப்போது இவனால் ப்ராஜெக்ட்டிலிருந்து நிராகரிக்கப்பட்ட காயத்திரியிடம் கேட்கலாம் என்று சதீஷ் கேட்கின்றான். சந்தேகத்துடன் காயத்திரியிடம் கேட்கும் போது காயத்திரி ஒத்துக்கொள்கின்றான். நடிப்பதற்கு எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று கேட்கிறாள். நடிப்பதற்கு ஒரு நாளைக்கு இங்கு வாங்கும் சம்பளத்தில் மூன்று மடங்கு கேட்கிறாள். கண்ணன் ஒத்துகொள்கின்றான்.
கண்ணனுக்கு நிச்சயம் செய்ய குடும்பத்தினர் கிளம்பிக்கொண்டிருக்கும் போது காயத்திரியுடன் அங்கு கண்ணன் வருகிறான். குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர். தான் காயத்திரியை காதலிப்பதாக சொல்கிறான். காயத்திரி ஒரு அனாதையென்றும் தன் குடும்பத்தை போல் கூட்டுக்குடும்பத்தை விரும்புபவள் என்று சொல்கிறான். கோபத்திலிருக்கும் குடும்பத்தினர் இதை கேட்டதும் காயத்திரியிடம் நீ அனாதை என்று நினைக்காதே இங்கே இருக்கும் அனைவரையும் உன் உறவினராக நினைத்துக்கொள் என்று சொல்கிறாள் கண்ணனின் தாய். குடும்பத்தினர் அனைவரும் காயத்திரி கண்ணனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. கண்ணனும் எப்படியாவது திருமணத்தை தடுத்து நிறுத்த நினைக்கிறான். மணநாளன்று மணப்பெண் ஓடிவிட்டதாக சதீஷ் சொல்கிறான். திருமணம் நின்றுவிடுமென்று கண்ணன் நினைக்கும் போது மணப்பெண்ணாக காயத்திரி வருகின்றாள். வேறுவழியின்றி அவள் கழுத்தில் தாலி கட்டுகிறான்.
மிகப்பெரிய அளவு பணம் மற்றும் நகையுடன் அவள் கம்பி நீட்டப்போவதாக நினைக்கிறான் கண்ணன். ஒரு கட்டத்தில் தன் மருமகள் பெயரில் சொத்தை எழுதிவைக்க கண்ணனின் தந்தை முடிவெடுக்கும் போது கண்ணன் தடுக்கிறான் இவள் நடிக்கவந்தவள், பணத்திற்காக நடித்துக்கொண்டிருக்கின்றாள் என்று சொல்கிறான். நீங்கள் சொத்தை எழுதி வைத்தால் அவள் மொத்த பணம், நகை மற்றும் சொத்தை சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவாள் என்று சொல்கின்றான் கண்ணன்.
அப்போது காயத்திரி, நான் நீ வேலை செய்யும் கம்பெனியின் நிறுவனர் சிவனேசன் மகள் என்று சொல்கின்றாள். எதிரிகளால் ஒரு விபத்தில் தன் தந்தை சிவநேசன் கோமாவில் இருப்பதாகவும். அவரது கனவான இந்த ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்கத்தான் நிறுவனத்திற்கு வந்ததாக சொல்கிறாள். அது மட்டுமின்றி என் குடும்பத்தில் நானும் என் தந்தையும் மட்டுமே. இங்கே வந்ததும் உன் கூட்டு குடும்பத்தை பார்த்து விருப்பப்பட்டுதான் கல்யாணம் செய்து கொண்டதாக சொல்கிறாள். தன்னைப்பார்த்து பணத்திற்கு ஆசைப்படுபவளாக சொன்ன காரணத்திற்காக கோவித்துக்கொண்டு செல்கின்றாள்.
இதைப்பார்த்த கண்ணனின் தாய்க்கு மாரடைப்பு ஏற்படுகின்றது. கண்ணனின் தாய் எப்படியாவது என் மருமகளை கூட்டிவா என்று கண்ணனிடம் சொல்கின்றாள். கண்ணன் குடும்பத்தினர் அனைவரும் காயத்திரியை தேடுகின்றனர்.
இதே வேலை எதிரிகளால் காயத்திரி கடத்தப்படுகின்றாள். ப்ராஜெக்ட்டை அழிக்க முயல்கின்றனர். அங்கே வந்து எதிரிகளை துவம்சம் செய்து காயத்திரியை காப்பாற்றி ப்ராஜெக்டை வெற்றிகரமாக முடித்து கொடுக்கிறான்.
பாராட்டுக்குறியது.:
ஒரு குடும்ப கதையை அனைவரும் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளனர்.
மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளத்தை வைத்து இயக்கியிருப்பதே மிகப்பெரிய சாதனை.
கண்ணன் கதாப்பாத்திரத்தில் M சசிகுமார் சாப்ட்வேர் இண்ஜினியராகவும் அதே நேரேம் குடும்பத்தின் மீது பாசம் வைத்துள்ளவராகவும் நடித்துள்ளார்.
காயத்திரி கதாப்பாத்திரத்தில் நிக்கி கல்ராணி தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்.
நெருடலானவை.:
புதிதாக எதையும் சொல்லாமல் பல படங்களின் காட்சிகளையே திரும்ப கொடுத்துள்ளார். புதுமை என்ற அடிப்படைக்காக சாஃப்ட்வேர் கம்பெனி என்ற அடிப்படையை உள்ளே புகுத்தியிருந்தாலும், அதை சும்மா ஒப்புக்கு சப்பானியாகவே பயன்படுத்துயுள்ளார்.
கிராமப்புர அடிப்படையிலான குடும்ப கதையா இல்லை சிட்டி அடிப்படையிலான சாஃப்ட்வேர் கதையா என்ற குழப்பத்தில் படைக்கப்பட்ட திரைக்கதை.
அழுத்தமான பாத்திரப்படைப்பும் இல்லை. அழுத்தமான திரைக்கதையும் இல்லை.
ராதாரவி கதாப்பாத்திரத்தின் அடிப்படையே விளங்கவில்லை. ஏராளமான பெண்களை சென்று பார்க்கும் குடும்பத்தினர் எதிர்வீட்டிலிருக்கும் பெண்களை வெறுக்க காரணமென்ன. தெளிவில்லாத பாத்திரபடைப்பு இது.
90 நாளில் முடிக்க வேண்டிய ப்ராஜெக்ட் காலம் 30 நாட்களாக குறைக்கப்படுவதன் காரணம் விளக்கமில்லாத தொங்கல்.
தொகுப்பு.:
வழக்கமாக வந்து செல்லும் படங்களின் வரிசையிலான படம். மனதில் பதியுமளவிற்கான சிறப்பான அம்சங்கள் எதுவுமில்லாமல் சாதாரணமான திரைப்படம். மொத்தத்தில் ராஜவம்சம் மனதில் நிற்க மறுக்கும் திரைப்படம்.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.