Join/Follow with Our Social Media Links

WILD DOG ( வைல்ட் டாக்)-திரை விமர்சனம்

WILD DOG ( வைல்ட் டாக்)-திரை விமர்சனம்


மேட்னி எண்டர்டென்ய்ன்மெண்ட் சார்பில் S.நிரஞ்சன் ரெட்டி மற்றும் K.அன்வேஷ் ரெட்டி தயாரித்திருக்கும் படம் WILD DOG (வைல்ட் டாக்). ஆஷிஷோர் சாலமன் எழுதி இயக்கியிருக்கின்றார். S.தமன் இசையமைத்துள்ளார். ஷானில் தியோ ஒளிப்பதிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் நாகார்ஜூனா அக்கினேனி, தியா மிர்சா, சாய்யமி கெர், அலி ரேசா, அதுல் குல்கர்னி, அவிஜித் தத் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

கதை:

இந்தியாவில் ஏராளமான திரைமறைவு ராணுவநடவடிக்கைகள் தேசத்தின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. NIA மற்றும் RAW போன்ற அமைப்புகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆனால அவற்றின் நடவடிக்கைகள் செய்திகளில் வெளிவராது. அவர்களின் தியாகங்கள் வெளிப்படுத்திக்கொள்ள முடியாத ஒன்று.

 

2006 முதல் 2013 வரை இந்தியாவில் பல தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடந்துள்ளது. குறிப்பாக லும்பினி பார்க், கோகுலர் சாட்-தில்சுக் நகர் மற்றும் புனே ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு. இதில் அடங்கும். சுமார் 303 நபர்களின் மரணத்திற்கு தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான இந்தியன் முஜாஜிதின் பொருப்பேற்றது. அதற்கு மூளையாக செயல்பட்ட யாசின் பட்கல் நேபாளத்தில் இருப்பதாக அதை விசாரித்த NIA விற்கு தகவல் தெரிந்து அதில் பணிபுரிந்த ஐந்து NIA அதிகாரிகள் கொண்ட குழு ஒரு ஆபரேஷன் மூலம் யாசின் பட்கலை இந்தியாவிற்கு கொண்டுவந்தது. 19.12.2016 ஹைதராபத்தில் உள்ள N.I.A நீதிமன்றம் யாசினுக்கு தூக்கு தண்டனை வழங்கியது.

 

மேற்குறிய உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு கதையை அமைத்துள்ளார் ஆஷிசோர் சாலமன். கதைக்கு வரும் முன் விஜய் வர்மா (நாகார்ஜூனா அக்கினேனி) மற்றும் பிரியா வர்மா (தியா மிர்சா) தம்பதியனர் மகள் நவ்யா ஒரு சாட் கடையின் குண்டு வெடிப்பில் இறந்து போகின்றார். மகளை இழந்த சோகத்தில் அவர்கள் இருக்கின்ற சூழலில், புனேவில் உள்ள ஜான் பேக்கரியில் குண்டு வெடிக்கின்றது. அதை விசாரிக்க விஜய்வர்மா தலைமையிலான அலி ரேசா, ருத்ர கௌட், ஆஸ்வத் மனோகர், , கலீப் மேத்யு ஐந்து பேர் கொண்ட குழுவை அதை விசாரிக்க டி.ஐ.ஜி ஹேம்நாத் நியமிக்கின்றார்..அங்கு கிடைக்கும் CCTV தகவல் மற்றும் குண்டு வெடிப்பில் ஆபத்தான சூழ்நிலையில் இருந்த மீண்ட ஊழியர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் அந்த குண்டு வெடிப்பிற்கு காரணம் காலித் என்று கண்டுபிடிக்கின்றனர். அவனை நெருக்கும் போது அவன் தப்பிவிடுகின்றான். அந்த சூழலில் ஏற்படும்  ஒரு பிரச்சனையில் விஜய் வர்மா பதவியிலிருந்து விலக்கப்படுகின்றார். ஆனால் தனிப்பட்ட முறையில் பல நிழல் தேச பாதுகாப்பு நிறுவணங்களின் ஊழியர்களின் மூலம் காலித் நேபாளத்தில் இருப்பதாக தகவலை பெருகின்றார் அதில் குறிப்பாக நேபாளத்தில் இருக்கும் பெண் ஏஜெண்ட் ஆர்யா (சாய்யமி கெர்), மூலம் ஏராளமான தகவலை பெறுகின்றார். . அவனை கைது செய்ய இந்தியாவிற்கு அழைத்துவர உதவி புரியுமாறு டி.ஐ.ஜி ஹேம்நாத்திடம் சொல்கின்றார். ஆனால் அரசின் அணுமதி கிடைக்கமால் அவர் கையை விரிக்கின்றார். ஆனால் நேபாளத்தில் இருந்தே இந்தியாவில் இருக்கும் அவர் இயக்கத்தினர் மூலம் கோரமான குண்டு வெடிப்பை நிகழ்த்துகின்றான் காலித். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் விஜய் வர்மா அரசின் அணுமதியில்லாமல் நேபாளத்திற்கு சென்று காலித்தை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டுவர உதவுமாறு டி.ஐ.ஜி ஹேம்நாத்தை கேட்கின்றார். அவரின் உதவியுடம் சென்று எப்படி நேபாளாத்திற்கு சென்று பலபிரச்சனைகள் துரோகங்களை தாண்டி காலித்தை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வருகின்றனர் என்பதே கதை.

 

பாராட்டுகுறியவை:

 

ஒரு உண்மைக்கதையை தழுவி உண்மை நிகழ்வின் அடிப்படையை சிதைக்காமல் அப்படியே கொடுத்துள்ளார்கள்.

 

விஜய்வர்மா கதாபாத்திரத்திற்கு நாகார்ஜூனா அக்கினேனி தான் பொருத்தமானவர் காரணம் இந்த அடிப்படையிலான கதாபாத்திரத்தில் பல படங்களில் அவரை பார்த்துள்ளதால் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

அரசின் மறைமுக நடவடிக்கையை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். அந்த முகம் தெரியாத நபர்களின் அளப்பறிய சாதனையை எடுத்து சொல்லியுள்ளனர்.

 

படத்தில் எங்கேயுமே தொய்வே ஏற்படமால் திரைக்கதையை நகர்த்தியுள்ளனர்.

 

ஆர்யாவாக நடித்திருக்கும் (சாய்யமி கெர்), ஆக்ஷன் பகுதிகள் கொடுத்துள்ளார் இயக்குனர்.

 

தேசத்தை நேசிப்பவர்கள் பார்க்க வேண்டிய படமாக இருக்கின்றது.

 

நெருடலானவை:

 

நேபாளத்தின் உயர்தட்டும் அமைச்சர் அப்துல்லா (அவிஜித் தத்) கதாப்பாத்திரம் உண்மை அடிப்படையில் இருந்ததா இல்லை சுவராசியத்திற்காக சேர்க்கப்பட்டதா. காரணம் ஒரு நட்பு நாட்டின் அமைச்சர் தீவிரவாதிக்கு துணைபோவது போன்று இருப்பது சற்று நெருடலாக இருக்கின்றது.

 

கோகுலர் சாட்-தில்சுக் நகர் கடையின் வெடிகுண்டு நிகழ்வை கதைக்குள் கொண்டுவருவதற்காக விஜய் வர்மா மகள் அங்கே சாட் சாப்பிடும் போது வெடிகுண்டு வெடிப்பதை போல் கதையை சித்தரித்திருப்பது. ஒரு வேலை விஜய் வர்மாவின் வேதனையும் கோபத்தை ஒருக்கிணைக்க இந்த காட்சி தேவைப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது

 

வழக்கமாக இது போன்ற கதைகளில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தேவையில்லை. அதையே இயக்குனரும் பின் தொடர்கின்றார்.

 

தொகுப்பு:

WILD DOG (வைல்ட் டாக்) முகம் தெரியாத தங்களை பிரபலபடுத்திக் கொள்ள  கடமையை செய்யாத உயிரை துச்சமென மதித்து உள அர்பணிப்புடன் தேச நலனில் ஈடுபடும் நபர்களுக்கான ராயல் சல்யூட்.

Movie Gallery

  • review

    Bhavana

  • review

    Mumtaj

  • review

    Vimala Raman

  • review

    Poonam Bajwa

  • review

    Gayathri

  • review

    Madhu Shalini

  • review

    Nithya Menen

  • review

    Remya Nambeesan

  • review

    Radhika Apte

  • review

    Trisha Krishnan

  • review

    Saiyami Kher

  • review

    Bhavana

  • review

    Janani Iyer

  • review

    Keerthy Suresh

  • review

    Priyanka Arul Mohan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.