திங்க் பிக் மற்றும் அமிர்தா ஸ்டூடியோஸ் சார்பில் இயக்குனர் A L விஜய் மற்றும் மங்கையர்கரசி தயாரித்துள்ள படம் சித்திரை செவ்வானம். இயக்குனர் A L விஜய் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார். சண்டைபயிற்சி இயக்குனர் சில்வா, இந்த படத்தின் வசனம், திரைக்கதை எழுதி இயக்குனராகின்றார். சாம் C S இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்ஸா மற்றும் K G வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். K L பிரவீன் படத்தை தொகுத்துள்ளார்.
ஜீ 5 ஒடிடி தளத்தில் 03-12-2021 முதல் சித்திரை செவ்வானம் திரைப்படம் ஒளிபரப்பாகின்றது.
சித்திரை செவ்வானம் படத்தில் சமுத்திரகனி முத்துப்பாண்டி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரீமா கல்லிங்கள் இன்ஸ்பெக்டர் ஆஷா நாயர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா கண்ணன் முதன் முதலாக ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் முத்துப்பாண்டி மகளாக நடித்துள்ளார். வித்யா பிரதீப் லக்ஷ்மி கதாப்பாத்திரத்தில் முத்துப்பாண்டி மனைவியாக நடித்துள்ளார். T சிவா பிரபுவின் தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுப்ரமனியம் சிவா அரசியல்வாதி அரவிந்தின் தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு.:
செய்திதாள்களில் பரபரப்பாகும் செய்திகளின் வழியாக பல திரைப்பட கரு உருவாகும். அந்த அடிப்படையில் பொள்ளாச்சி பாலியல் வழக்குகள் அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் தான் சித்திரை செவ்வானம்
கதை.:
அரசம்பாளையம் கிராமத்தில் விவசாயம் செய்துவருபவர் முத்துப்பாண்டி. போலிஸ் காண்ஸ்டபிள் இருவர் அவரை சந்திக்கின்றனர். அவரது மகள் ஐஸ்வர்யாவை காணவில்லை என்று ஹாஸ்டல் வார்டன் புகார் கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அது சார்பாக விசாரிக்க வேண்டும் என்று காவல் நிலையத்திற்கு வரசொல்கின்றனர். முத்துப்பாண்டி காவல்நிலையத்திற்கு செல்கிறார். அங்கே இன்ஸ்பெக்டர் ஆஷா நாயரிடம் தன் மகளுக்கு என்னவாயிற்று என்று கேட்கிறார். உங்கள் மகளை காணவில்லை என்று ஹாஸ்டல் வார்டன் புகார் கொடுத்திருப்பதாகவும். உங்கள் மகள் குளிப்பதை யாரோ வீடியோ எடுத்து பரப்பியுள்ளதாக தெரிவிக்கிறார். இந்த வீடியோ மேலும் பரவாமல் தடுக்க முடியாதா என்று முத்துப்பாண்டி கேட்கிறார். அதற்குதான் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் நீங்களும் ஒரு புகார் எழுதிக்கொடுங்கள் நாங்கள் உங்கள் மகளை தேடி கண்டுபிடிக்கிறோம் என்று சொல்கிறார். போலிஸீல் புகார் செய்துவிட்டு ஹாஸ்டல் வார்டனை சந்திக்க செல்கிறார் முத்துப்பாண்டி.
ஹாஸ்டல் வார்டன் நடந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்கிறார். இது எப்படி நடந்தது என்று தெரியவில்லையென்று சொல்கிறார். அப்போது அங்கே வரும் ஐஸ்வர்யாவுடன் அறையில் தங்கியிருக்கும் அவள் தோழி முத்துப்பாண்டியிடம் தனக்கு வீடியோ வந்த தகவலை நான் தான் ஹாஸ்டல் வார்டன் மூலம் போலிஸிற்கு தகவல் சொல்லியதாக சொல்கின்றாள். அந்த வீடியோவை யார் அனுப்பினார் என்று கேட்கின்றார். அதற்கு சேகர் என்பவன் அனுப்பியதாக சொல்கிறாள். சேகரை சென்று சந்திக்கிறார் முத்துப்பாண்டி அப்போது சேகர் மற்றும் அவன் நண்பர்களிடம் வீடியோ அழித்துவிடுமாறு கெஞ்சி கேட்கிறார். அதோடு இந்த வீடியோ யார் உங்களுக்கு அனுப்பினார் என்று கேட்கிறார். அதற்கு சேகரும் அவனது நண்பர்களும் இப்ரஹிம் என்பவன் அனுப்பியதாக சொல்கின்றனர். இப்ரஹிமை சந்திக்கின்றார் முத்துப்பாண்டி. இப்ரஹிம் தனக்கு இந்த வீடியோவை பிரபு அனுப்பியதாக சொல்கிறார். பிரபுவை தேடி செல்கிறார் முத்துப்பாண்டி.
முத்துப்பாண்டியின் மனைவி லக்ஷ்மி. ஐஸ்வர்யாவின் சிறுவயதிலேயே மின்சாரம் தாக்கி இறக்கின்றாள். தன் மனைவி சரியான மருத்துவ வசதியில்லாத காரணத்தால் தான் இறந்ததாக என்னும் முத்துப்பாண்டி தன் மகளுக்கு டாக்டராக வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கின்றார். ஐஸ்வர்யாவிற்கு தந்தைக்கு தந்தையாகவும் தாயாகவும் இருக்கிறார் முத்துப்பாண்டி. நல்ல மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதல் மாணவியாக வருகிறாள் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவை டாக்டராக்க நீட் தேர்வு பயிற்சிக்காக தன் நிலத்தின் ஒரு பகுதியை விற்று படிக்கவைக்கிறார். கிராமத்திலிருந்தால் படிக்க முடியாது என்ற காரணத்திற்காக நகரத்திலிருக்கும் பெண்கள் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைக்கிறார் முத்துப்பாண்டி.
இன்ஸ்பெக்டர் ஆஷா பிரபுவின் வீட்டிற்கு விசாரனைக்கு செல்கிறார். அங்கே பிரபு வீட்டில் இல்லையென்றும் தந்தையின் பாரில் இருப்பதாக சொல்கிறாள் பிரபுவின் தாய். அப்போது ஆஷாவிற்கு ஒரு போன் வருகிறது. 16 வயது மதிக்கதக்க ஒரு பெண்னின் பிணம் ரயிலில் அடிபட்டு இறந்ததாகவும். அந்த பிணம் அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் இருப்பதாக தகவல் வருகிறது. முத்துப்பாண்டியை அழைத்து வந்து அந்த பிணம் அவரது மகளா என்று பார்க்க சொல்கின்றனர். முத்துப்பாண்டி சென்று முகம் சிதைந்த நிலையில் உள்ள பிணத்தை பார்க்கிறார். அது தன் மகள் இல்லை என்று முத்துப்பாண்டி சொல்கிறார். அந்த பிணத்தை அனாதை பிணமாக சொல்கின்றனர்.
பிரபுவின் தந்தை மதுக்கடையில் பார் நடத்திவருகின்றார். அவரிடம் கடன் வாங்கிய அரசியல்வாதியின் மகன் அரவிந்திற்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் அரவிந்தின் அடியாட்களால் தாக்கப்பட்ட பிரபு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான். பிரபுவிற்கு சுயநினைவு வருகிறது. அவனை பார்த்த முத்துப்பாண்டி வீடியோவை யார் அனுப்பினார்கள் என்று கேட்கிறான். ஆனால் பதில் சொல்லும் முன் அவன் இறந்து போகிறான். கோபத்தின் உச்சத்திலிருக்கும் பிரபுவின் தந்தை எப்படியாவது அந்த அரவிந்தை கொல்வதாக சொல்கிறார். அரவிந்த எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி அவனை கொல்வதாக சொல்கிறார்.
ஒரு காபி ஷாப்பில் அரவிந்த் தன் நண்பர்களுடன் இருக்கிறான். பாத்ரூமிற்கு செல்லும் அவனை கோட் போட்ட ஒருவன் பின் தொடர்கிறான். சண்டைப்போட்டு அவனிடமிருந்து மொபைல் போனை பறிக்க முயல்கிறான். முடியாமல் போக அங்கிருந்து ஓடிவிடுகிறான். அப்போது அரவிந்த் முகத்தில் கோணியை போட்டு மற்றொரு உருவம் கடத்துகிறது.
முத்துப்பாண்டி காவல்நிலையத்திற்கு சென்று தன் மகள் பற்றிய தகவல் ஏதாவது இருக்கிறதா என்று ஆஷாவிடம் விசாரிக்கிறார். அப்போது அங்கே வரும் எதிர்கட்சியை சார்ந்த முன்னாள் அமைச்சரும் அரவிந்தின் தந்தை வருகிறார். முத்துப்பாண்டியை வெளியே தள்ளிவிடுகிறான். ஆஷாவிடம் சென்று அதிகார தோரணையில் தன் மகன் காணமல் போன புகார் மீது எடுத்த நடவடிக்கைபற்றி விசாரிக்கிறான். முத்துப்பாண்டி கவலை தோய்ந்த முகத்துடன் வெளியே வருகிறான். ஏழைகளின் புகார்களுக்கு மதிப்பே இல்லையென்று புலம்புகிறான். அருகிலிருக்கும் பெட்டிக்கடைக்காரரிடம் தண்ணீர் வாங்கி குடிக்கிறான். பெட்டிக்கடைக்காரரும் அனுசரணையோடு முத்துப்பாண்டியிடம் பேசுகிறார், இந்த தப்பை செய்தவனையெல்லாம் உயிரோடு எரிக்கவேண்டுமென்று சொல்கிறான்.
அங்கிருந்து கிளம்பும் முத்துப்பாண்டி உபயோகமில்லாத தொழிற்சாலைக்குள் செல்கிறான், அங்கே அரவிந்த் கை கட்டப்பட்ட நிலையில் இருக்கிறான். முத்துப்பாண்டி அவனிடம் செல்போனை ஆன் செய்து அதிலிருந்த படத்தை அழிக்கிறான். அவனை கொன்று சரக்கு ஏற்றி செல்லும் ரயிலில் போட்டுவிட்டு. அந்த மொபைல் போனை தண்டவாளத்தில் வைத்து நசுக்குகின்றான்.
அரவிந்த் செல்போன் அணைந்த இடத்தை வைத்து போலிஸ் விசாரனை செய்கிறது. ஆனால் விசாரணையில் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆஷா அரவிந்த் கடத்தப்பட்ட காபி ஷாப்பில் விசாரணை செய்யும் போது C C T V அடிப்படையில் கோட் போட்ட மனிதனை சந்தேகிக்கிறாள்.
பிரகாஷ் என்பவன் வீட்டு முன் முத்துப்பாண்டி காத்திருக்கிறான். பிரகாஷ் தான் சினிமாவிற்கு செல்வதாக தன் தாயிடம் சொல்லிவிட்டு காரில் செல்கிறான். செல்லும் வழியில் தான் சினிமாவிற்கு வரவில்லையென்று தன் நண்பர்களிடம் சொல்கிறான். உங்களுக்கு நான் நாளைக்கு வேறு சினிமா காட்டுவதாக சொல்கிறான். ரம்யா என்ற பெண் இன்ஸ்டாகிராம் வழியாக பிரகாஷூடன் தொடர்பை ஏற்படுத்தி நட்பானவள். பிரகாஷ் ரம்யாவை வழியில் ஏற்றிக்கொண்டு ஒரு ஹோட்டலுக்கு செல்கிறான். கோட் போட்ட உருவம் பின் தொடர்கிறது. ஆனால் அதே ஹோட்டலுக்கு இன்ஸ்பெக்டர் ஆஷா தன் கணவன் மற்றும் மகளுடன் வருகிறார். இதை பார்த்த கோட் மனிதன் ஹோட்டலுக்குள் செல்லாமல் வெளியே காத்திருக்கின்றான். சாப்பிடும் போது பிரகாஷ் மற்றும் ரம்யாவை பார்க்கிறார் ஆஷா. பிரகாஷ் மற்றும் ரம்யா சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து காரில் செல்கின்றனர். கோட் போட்ட மனிதன் அவர்களை பின் தொடர்கிறான். காரில் போட்டோ எடுக்கவும் தகாத முறையில் பிரகாஷ் ரம்யாவிடம் நடந்து கொள்ள முயற்சிக்கிறான். அப்போது கோட் மனிதன் காரை மறித்து அவனுடன் சண்டை போடுகிறான். அப்போது அங்கே வரும் பிரகாஷ் நண்பன் மேத்யூவும் கோட் மனிதனுடன் சண்டை போடுகிறான். சண்டையில் கோட் போட்ட மனிதனின் செயின் கீழே விழுகின்றது. இதனிடையே ரம்யா தப்பிக்கிறாள். இருவருடனும் சண்டை போட முடியாமல் கோட் மனிதன் தப்பி போகின்றான். அங்கே வரும் முத்துப்பாண்டி பிரகாஷை அடித்து கோணியில் கட்டி சைக்கிளில் எடுத்துக்கொண்டு வரும்போது ஹோட்டலில் இருந்து குடும்பத்துடன் வரும் ஆஷா முத்துப்பாண்டியை பார்க்கின்றார். முத்துப்பாண்டி அதிர்ச்சியடைகின்றார். ஆனால் சமாளித்து தன் மகளை பற்றி விசாரிக்கின்றார். அவர் விரைவில் கண்டுபிடித்து கொடுப்பதாக சொல்லி அங்கிருந்து செல்கின்றார்.
பிரகாஷ் கடத்தப்பட்ட செய்தி அறிந்து ஆஷா விசாரிக்க செல்கிறார். அங்கே கீழே விழுந்து கிடக்கும் செயினை கைப்பற்றி அதிலிருக்கும் பிளாட்டினம் டாலரை கொண்டு வாங்கிய இடத்தை கண்டு பிடிக்க சொல்கின்றார், பிரகாஷ் தாய் தந்தையை வரைவழைத்து விசாரிக்கிறார். பிரபு, அர்விந்த் மற்றும் பிரகாஷ் கடத்தலுக்கு பின்னனியில் முத்துபாண்டி இருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது ஆஷாவிற்கு. பிராகாஷூடன் இருந்த பெண் ரம்யாவை சென்று ஆஷா விசாரிக்கின்றார். தான் தவறு செய்யவிருந்ததாகவும் கோட் போட்ட மனிதன் தான் தன்னை காப்பாற்றியதாக சொல்கிறாள். கைப்பற்றிய நகையை வைத்து கோட் போட்டவரை கைது செய்கின்றார் ஆஷா. கைது செய்யப்பட்டவர் ஆண் இல்லை பெண். அவள் ஐஸ்வர்யாவின் தோழி என்பது தெரிய வருகிறது. அவளிடம் ஏன் அவர்களை கடத்தினாய் என்று கேட்கிறார் ஆஷா. ஆனால் நான் அவர்களை கடத்தவில்லை. அவர்கள் நான் குளிக்கும் போது எடுத்த படத்தை அவர்கள் மொபைலில் இருந்து அழிக்கவே முயற்சித்ததாக சொல்கிறாள். ஒரு முறை அவர்கள் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததை பிரின்ஸ்பலிடம் ஐஸ்வர்யா சொல்லி நடவடிக்கை எடுக்க வைத்தார். நான் ஐஸ்வர்யா முத்துப்பாண்டி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது மூவரும் வந்து புகார் கொடுத்த ஐஸ்வர்யாவை மிரட்டியதாகவும். அவர்களை ஐஸ்வர்யா செருப்பால் அடித்ததையும் சொல்கிறாள். இதை ஏன் விசாரணைக்கு வந்த போது சொல்லவில்லை என்று ஆஷா கேட்கிறார். அவர்களை பற்றி சொன்னால் என் வீடீயோவை சமூகவலைதளத்தில் போட்டுவிடுவதாக மிரட்டினார்கள் அதனால் தான் சொல்லவில்லை என்று சொல்கிறாள். அந்த மூன்றாவது ஆள் யாரென்று கேட்கின்றார் ஆஷா. அவன் பெயர் மாத்யூ அவர் அண்ணன் பிரபல கிரிமினல் லாயர் என்று சொல்கின்றாள் ஐஸ்வர்யாவின் தோழி.
பிரகாஷை அடித்து உதைக்கின்றார் முத்துப்பாண்டி. அப்போது ஐஸ்வர்யாவை பழி வாங்க அவள் குளிப்பதை வீடியோ எடுத்ததாகவும். அதை வைத்து அவளை மிரட்டி மூன்று பேரும் கற்பழித்து தூக்கி வீசியதையும் சொல்கின்றான். அவனையும் கொன்று கோணியில் கட்டிக்கொண்டு கிளம்புகிறார் முத்துப்பாண்டி. அந்த வழியே வரும் ஆஷா கோணியை பார்த்து சந்தேகிக்கின்றான். ஆனால் கோணியில் இருந்தது உண்மை உர மூட்டை தான் என்று பாக்கின்றாள். அதே நேரம் முத்துப்பாண்டி கையில் அடிபட்டு அதிலிருந்த வந்த ரத்தத்தை துடைப்பது போல் துடைத்து அதை ஆய்வுக்கு அனுப்புகிறாள் ஆஷா.
உண்மையில் கற்பழிக்கப்பட்டு மிகுந்த உபாதையுடன் வீட்டிற்கு வரும் மகளை காப்பாற்ற முத்துப்பாண்டி சைக்கிளில் கூட்டி செல்கிறார். வழியில் அந்த வீடியோவை எப்படியாவது அழிக்குமாறு ஐஸ்வர்யா சொல்லி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். அரசு மருத்துவமனையில் இருந்த பிணம் உண்மையில் ஐஸ்வர்யாவுடையது தான்.
மாத்யூவின் சகோதரர் கிரிமினல் லாயர் தன் தம்பியை காப்பாற்ற யாருக்கும் தெரியாமல் தன் டிரைவர் மூலம் வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கின்றார். மாத்யூவை பற்றி விசாரிக்க வந்த ஆஷாவிடம் அவன் எங்கே இருக்கிறான் என்று தனக்கு தெரியாது என்று சொல்கிறான்.
மாத்யூ சென்ற காரின் முன் ஆணிக்கட்டையை போட்டு டயரை பஞ்சராக்குகிறார் முத்துப்பாண்டி. மாத்யூவையும் கடத்திக்கொண்டு போய் கொல்கிறார். போனை ரயில் தண்டவாளத்தில் போட்டு காத்திருக்கிறார்.
அரசு மருத்துவமனையில் இருந்த பிணம் ஐஸ்வர்யாவின் பிணம் என்பதை உறுதி செய்கின்றார் ஆஷா. இதற்கிடையே ஆஷாவிற்கு மாத்யூ கடத்தப்பட்ட விவரம் தெரிந்து அந்த இடத்திற்கு செல்கிறார். அவன் மொபைல் எங்கே அணைக்கப்பட்டது என்று விசாரிக்க சொல்கிறார். மூன்று பேருடைய மொபைல் போனும் அணைக்கப்பட்டது ஒரே இடத்தில் தான்.
ரயில் தண்டவாளத்தில் மொபைல் போனை வைத்து காத்திருக்கிறார் முத்துப்பாண்டி ரயில் வருகிறது. மொபைல் போனை நசுக்கிவிட்டு ரயில் செல்கிறது. ஆஷா முத்துப்பாண்டியிடம் நடந்த அனைத்தும் எனக்கு தெரியும். தயவு செய்து சரணடைந்து விடுங்கள் என்று சொல்கிறார். ஆனால் ஓடும் ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொள்கிறார் முத்துப்பாண்டி.
பத்திரிக்கைகளுக்கு ஆஷா பேட்டி கொடுக்கின்றாள். ஏழை விவசாயி முத்துப்பாண்டி, யாரோ தன் மகளை தவறாக போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பியதால் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்கிறார். எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வேகமாக பரவுகின்றதோ அதைவிட வேகமாக தவறுகளும் குற்றங்களும் பரவுகின்றன என்று சொல்கிறார்.
பாராட்டுக்குறியவை.:
ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா முதன் முறையாக திரைக்கதை, வசனம் எழுதி அருமையாக இயக்கியுள்ளார். மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி சம்பவத்தின் அடிப்படையை எடுத்துள்ளதால் இந்த காலகட்டத்தில் அனைவரையும் படத்துடன் ஒன்ற வைத்துள்ளார்.
முதல் பாதியை பாசப்பிணைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நகர்த்திய இயக்குனர் இரண்டாம் பாதியில் கிரைம் திரில்லர் அடிப்படையில் திரைக்கதையை எழுதியுள்ளார். இரண்டாம் பாதி மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.
முத்துப்பாண்டி கதாப்பாத்திரத்தில் பொருப்புள்ள தந்தையாகவும், மகளின் மரணத்திற்கு பழிதீர்க்கும் கதாப்பாத்திரத்திலும் அருமையாக நடித்துள்ளார்.
அறிமுக நடிகை பூஜா கண்ணன் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
யுவன் யுவதி படத்திற்கு பிறகு தமிழில் ரீமா கலிங்கல் இன்ஸ்பெக்டர் ஆஷா நாயர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்திற்கு அருமையான பொருத்தமான தேர்வு.
மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு அருமை.
நெருடலானவை.:
மகள் மரணத்திற்கு முன் அனைத்து நிகழ்வுகளும் தெரிந்திருந்தும் முத்துப்பாண்டி ஒன்றுமே தெரியாதது போல் ஹாஸ்டலுக்கு சென்று முத்துப்பாண்டி விசாரிப்பது. ஒவ்வொரு மாணவர்களையும் சந்திப்பது போன்ற நிகழ்வுகள் முழுப்படமாக பார்க்கும் போது நெருடலாக இருக்கிறது. ஆனால் திரைக்கதையின் போக்கில் அது விறுவிறுப்பிற்காக இருந்தாலும் முழுப்படத்தையும் பார்க்கும் போது அந்த அடிப்படை நெருடலாக உள்ளது.
அதே போல் கோட் மனிதன் செல்லுமிடங்களில் இருந்து அனைவரும் கடத்தப்படுவதும். அந்த இடத்திற்கு முத்துப்பாண்டியும் எப்படி வருகின்றார். இதுவும் திரைக்கதை விறுவிறுப்பிற்கு உதவினாலும் லாஜிக் இல்லாமல் இருக்கிறது.
தொகுப்பு.:
சில லாஜிக் மீறல்களை தாண்டி மனதோடு இயையும் குடும்பக்கதை அடிப்படையிலான திரில்லர் படம் சித்திரை செவ்வானம்.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.