Join/Follow with Our Social Media Links

Rudra-thandavam

ருத்ர தாண்டவம் திரை விமர்சனம்


GM ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் இயக்குனர் மோகன் G சத்ரியன் தயாரிக்க 7G ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம். மோகன் G சத்ரியன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு ஜூபின் இசையமைத்துள்ளார். ஃபரூக் J பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். S..தேவராஜ் படத்தை தொகுத்துள்ளார்.

ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர்ட் ரிஷி (ருத்ர பிரபாகரன்), கவுதம் வாசுதேவ் மேனன் (வாதபிராஜன்), தர்ஷா குப்தா (வராஹி), தம்பி ராமைய்யா (ஜோசப்), ராதாரவி (வக்கீல் இந்திர சேனா), மாளவிகா அவினாஷ் (நீதிபதி), Y.G.மகேந்திரன் (விசாரனை அதிகாரி), மனோபாலா (பாஸ்டர்-Paster), G.மாரிமுத்து (அரசு வழக்கறிஞர்), காக்க முட்டை விக்ணேஷ் (மாறன்), தீபா (மாறனின் தாய்), ராமசந்திரன் துரைராஜ் (ரேஞ்சர் ரவி-லோக்கல்) மற்றும் பலர் நடித்துள்ளனர்

கதைக்கரு:

பாதுப்பிற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்பை எடுத்து சொல்லியுள்ளனர். குறிப்பாக The Protection of Civil Rights (PCR) Act அதாவது வன்கொடுமை தடுப்பு சட்டம் அதிலும் தீண்டாமை அடிப்படையிலான சரத்துக்களை பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுத்துவதற்கு பதில் பழிவாங்க பயன்படுத்தப்படுவதை அடிப்படையாக கொண்ட கதைக்களத்தை கருவாக் எடுத்துள்ளனர்.

கதை:

ருத்ர பிரபாகரன் நேர்மையான போலிஸ் அதிகாரி. தன் கர்பினி மனைவி வராஹியுடன் வசித்து வருகின்றார். அவரை ஃபிஸ்ஸிங்க் ஹார்பர் கடலோர பகுதியில் இண்ஸ்பெக்டாராக பணியிட மாற்றம் செய்கின்றனர்.

வாதபிராஜன் போதை பொருள் கடத்தலின் சூத்திரதாரி மட்டுமல்ல மனித உரிமை மீட்பு கழகம் என்ற அரசியல் கட்சி தலைவன் என்ற பாதுகாப்பில் பல ஜாதி கட்சிகளை மறைமுகமாக உருவாக்கி அரசியல் ராஜங்கம் செய்து வருபவன். அவன் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்பவன் ரேஞ்சர் ரவி அவனும் ஒரு கட்சியின் முக்கிய பிரமுகராக இருப்பவன். போதை பொருள் விற்பனைக்கு உறுதுணையாக இருப்பவன். ரேஞ்சர் ரவி ஹார்பர் பகுதியை சேர்ந்தவன்,

இலங்கையிலிருந்து வதாபியால் கொண்டுவரப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்கின்றான் ருத்ர பிரபாகரன். ஆனால் ரூ.20 கோடி போதைப்பொருள்தான் பிடிபட்டதாக சொல்லி மீதமுள்ளதை திருப்பி வாதபியிடம் கொடுப்பதாக சொல்லி ஏமாற்றி மீதமுள்ள போதை பொருள்களை எரிக்கின்றான். ஒரு வேலை மொத்த பொருளையும் பிடித்ததாக சொல்லி அரசாங்கத்திடம் ஒப்படைத்தால் தன் செல்வாக்கை பயன்படுத்தி வாதாபி திரும்ப பெறக்கூடாது என்ற அடிப்படையில் அதை எரிக்கின்றான் ருத்ரன், இதனால் கோபமடைந்த வாதாபி அவனை பழிவாங்க காத்திருக்கின்றான்.

அதே நேரம் மாறனும் அவன் நண்பன் மதியும் கஞ்சா விற்பதை தெரிந்து அவர்களை கைது செய்ய முயல்கின்றான். அவர்கள் சிறுவர்கள் என்பதால் அதை ரகசிய கேமராவில் பதிவு செய்ய சொல்கின்றான். ஆனால் அவர்கள் பிடியிலிருந்து பைக்கில் தப்பிக்கின்றனர். அவர்களை பின் தொடரும் ரூத்ரன் அவர்கள் செல்லும் பைக்கை எட்டி உதைக்கின்றான். அதனால் தடுமாறி கீழே விழும் இருவரில் மாறனுக்கு தலையில் அடிபடுகின்றது. மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு சிகிச்சை அளித்து காவல் நிலையத்து கூட்டி வருகின்றான். அங்கே மாறன் மற்றும் மதியின் பெற்றோரை வரவழைத்து மாறன் மற்றும் மதியின் சிறு வயதை கருத்தில் கொண்டு கஞ்சா வழக்கு போடாமல் பொது இடத்தில் புகைபிடித்த வழக்கை போட்டு இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அணுப்புகின்றான்.

வீட்டிற்கு சென்ற மாறன் வலிப்பு வந்து இறந்து போகின்றான். அவன் இறப்புக்கு காரணம் தலையில் பட்ட அடிதான் என்று சொல்லி ருத்ரனை கைது செய்ய போராடுகின்றனர். ஆனால் இந்த வழக்கை மேலும் பெருதுபடுத்த விரும்பிய வாதாபி இந்த கொலைக்கு சாதி காரணம் என்று கூறி அதை பெருது படுத்தி மாறன் சட்டையில் இருந்த அம்பேத்கார் படம் காரணமாக ஜாதி வெறியில் ருத்ரன் அவனை எட்டி உதைத்து கீழே விழுந்து அடிபட்டதால் தான் மாறன் இறந்தான் என்று சித்தரித்து ருத்ரனை கைது செய்ய வைக்கின்றான்.

கொலைகாரன் மற்றும் ஜாதிய முத்திரைக்குத்தி குற்றவாளியாக இருக்கும் ருத்ரன் தன்னையோ குழந்தையோ பார்க்கக்கூடாது என்று சொல்கின்றாள் வாராஹி.

ஜாமினில் வெளிவரும் ருத்ரன் மனைவியையும் குழந்தையும் பார்க்க செல்கின்றான். ஆனால் அவள் அவனை பார்க்க விரும்பாமல் திருப்பி அணுப்புகின்றாள். தன்னை நிரபராதி என்று நீருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றான் ருத்ரன்.

ஏதாவது தகவல் கிடைக்குமா என்று மாறனின் தாயை சந்திக்க செல்கின்றான் ருத்ரன். அப்போது சுவற்றில் மாறன் கிறிஸ்தவ மதமாற்ற ஞானஸ்தானம் பெரும் போட்டோவை பார்க்கின்றான். மாறனின் தாயிடம் நடந்த நிகழ்வுகளுக்கு மண்ணிப்பு கேட்கின்றான் ருத்ரன். மாறனின் தாயோ நானோ என் மகன் மாறனோ உங்களை என்றுமே தவறாக நினைத்ததில்லை என்று சொல்கின்றாள்.

மாறனின் நண்பன் மதியிடம் கேட்டால் ஏதாவது தகவல் கிடைக்குமாக என்று அவனை பார்க்க செல்லும் போது தான் மாறனின் சகோதரன் போதை பொருள் வியாபாரி அன்பு வைத்திருந்த போதைப்பொருளை அளவுக்கதிகமாக உட்கொண்ட காரணத்தால் தான் மாறன் உயிரிழந்தான் என்றும். அதை வெளியில் சொல்ல முடியாமல் இருக்க காரணம் அன்பு மற்றும் ரேஞ்சர் ரவி தான் காரணம் என்று சொல்கின்றான்.

மாறனின் சகோதரன் அன்புவை பிடித்து விசாரிக்கும் போது தான் இந்த வழக்கை ஜாதி ரீதியிலான வழக்காக மாற்றியது வாதாபி தான் என்று தெரிந்து கொள்கின்றான்.

மதம் மாறிய ஒருவருக்கு ஜாதிய அடிப்படையில் உரிமையில்லை அப்படியிருக்கும் போது இந்த வழக்கின் அடிப்படையே தவறு என்று வாதிடுகின்றார் வக்கீல் இந்திர சேனா. போட்ட வீடியோ இல்லாமல் வேறு ஆதாரம் இல்லாத காரணத்தால் அன்புவிடம் விசாரிக்க விண்ணப்பிக்கின்றார் இந்திர சேனா, ஆனால் விசாரனை தினத்தன்று அன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்கின்றனர்.

கடைசியாக மதியை விசாரிக்க கோர்டில் அணுமதி கோருகின்றார். அதோடு மாறன் மற்றும் மதியை கஞ்சா வியாபாரம் செய்த போது எடுத்த வீடியோவையும் ஆதாரமாக கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர் இந்திர சேனா மற்றும் ருத்ரன். மதியை பாதுகாத்து வைத்திருக்கும் ஜோசப்பிடம் வாதாபி மதியை பற்றி விசாரிக்கின்றான். ஆனால் உண்மையை சொல்ல மறுத்த காரணத்தால் ஜோசப்பை அடித்து கோமாவில் தள்ளுகின்றான். ஆனால் கஞ்சா விற்றபோது எடுத்த வீடியோ ஜோசப்பிடம் இருந்தது. அவர் கோமாவில் இருப்பதால் அந்த வீடியோவை சமர்பிக்க முடியாமல் போகின்றது.

இதற்கிடையில் ஒரு குடோனில் போதைப்பொருள் வைத்திருப்பதை தெரிந்து அங்கு செல்லும் ருத்ரன் போதைப்பொருள் மட்டுமின்றி போதைபொருள் கடத்தலுக்கு சூத்திரதாரியான வாதாபியையும் அழிக்கின்றான்.

கோர்ட்டுக்கு வரும் மதி நடந்த உண்மை அனைத்தையும் சொல்கின்றான். ஆனால் அங்கேயும் சாதி பிரச்சனை உருவாகின்றது. மதியும் ருத்ரனும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் அந்த சாட்சியும் செல்லாமல் போகின்றது.

கடைசியாக மறானின் தாய் கோர்ட்டுக்கு வந்து கஞ்சா கடத்தலின் போது எடுக்கப்பட்ட சிறு வீடியோப்பகுதியை கோர்ட்டில் காட்டி ருத்ரனை வழக்கிலிருந்து காப்பாற்றுகின்றாள். அது மட்டுமின்றி தன் மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் தான் அவனை சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதையும், அதே போல் தன் மகன் மறான் மரணத்திற்கு காரணமான ரேஞ்சர் ரவியையும், வாதபியையும் கொலைசெய்தது நான் தான் என்று சொல்கின்றாள். வாதபியை ருத்ரன் கொன்றிருந்தாலும் தன் மகனைப்போல் யாரும் போதையில் சிக்கித்தவிப்பதை தடுக்க ருத்ரனை போன்ற நேர்மையான அதிகரிகள் தேவை என்பதற்காக வாதாபியை தான் கொன்றதாக பொய் சொன்னதாக சொல்கின்றாள். கடைசியில் ருத்ரன் மனைவி வாராஹி கணவனை ஏற்றுக்கொள்கின்றாள்.

பாராட்டுக்குறியவை:

வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படும் அடிப்படையை இதுவரை யாரும் தொடதா கதைக்களத்தை தைரியமாக கையிலெடுத்துள்ளார். பாராட்டுக்குறியது.

அதே போல் மதம்மாற்ற அடிப்படையிலான ஆவணங்கள் சரியாக அரசு கையாள்வதில்லை என்ற அடிப்படையையும் சொல்லியுள்ளது. கவணிக்கப்பட வேண்டிய ஒன்று.

நாட்டிற்கு பொதுவான அரசியலைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கார் எப்படி ஜாதிய அரசியலுக்கு முன்னெடுக்கப்படுகின்றார் என்ற கேள்வியை கேட்டிருப்பது யோசிக்க வேண்டிய ஒன்று.

வக்கீல் இந்திர சேனாவாக அருமையாக நடித்து கைத்தட்டல் பெருகின்றார் ராதாரவி

ருத்ர பிரபாகரன் கதாப்பாத்திரத்திற்குள் கச்சிதமாக பொருந்தியுள்ளார் ரிச்சர்ட் ரிஷி

வாதாபி ராஜன் கதாப்பாத்திரத்தில் அசத்தாலான நடிப்படை வெளிப்படுத்தியுள்ளார் கவுதம் வாசுதேவ் மேனன்.

காண்ஸ்டெபில் ஜோசப் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள தம்பி ராமையா நடிப்பும் அருமை.

மாறனின் தாயாக தீபா ஒரு தாயின் பரிதவிப்பு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

நெருடலானவை:

வாராஹியாக நடித்திருக்கும் தர்ஷா குப்தா ஏதோ கதாநாயகி கதாப்பாத்திரம் தேவை என்பதற்காக இடைச் செருகலாக சேர்த்திருப்பதை போல் தெரிகின்றனது. கர்பிணி பெண்ணாக காண்பித்தால் மட்டும் போதும் கதாப்பாத்திரம் முழுமைபெற்றுவிடும் என்று இயக்குனர் நினைத்துவிட்டார் போலும். அழுத்தமில்லாத கதாப்பாத்திரம்.

விசாரணை அதிகாரியாக YG மகேந்திரன் வருவது பிளாஷ் பேக் கதையை சொல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. வீணடிக்கப்பட்டுள்ள அந்த அந்த பகுதியை வேறுவகையில் கையாண்டிருக்கலாம்.

இரண்டு நாள் கழித்து பிரேதப்பரிசோதனை செய்தால் போதைப்பொருள் உடலில் இருப்பது தெரியாதா? காட்சி ஓட்டத்தில் இந்த குறை நகர்ந்தாலும் மனதின் ஓரத்தில் வினா ஒட்டிக்கொண்டு தான் இருக்கின்றது.

இறுதி காட்சியில் எங்கிருந்தோ ஒரு கிடைத்த வீடியோ ஆதராத்தை மாறனின் தாய் கோர்ட்டில் கொடுப்பது பக்கா சினிமாத்தனம்.

படம் போகின்றது போகின்றது போய் கொண்டே இருப்பதை போல் தோன்றுகின்றது.

தொகுப்பு:

போலிஸ் அதிகாரிக்கும் கடத்தல் கும்பலுக்குமிடையிலான ருத்ர தாண்டவத்தில் ஒரு சட்டப்பிரச்சனையை மையப்புள்ளியாக வைத்து தீர்வை நோக்கிய வினாவை வைத்துள்ளார் இயக்குனர். மொத்ததில் ருத்ர தாண்டவம் தீர்வை நோக்கிய பயனத்தில் நம் மனதை ஒன்ற வைத்துள்ளது.

Movie Gallery

  • review

    Sri Divya

  • review

    Akshara Haasan

  • review

    Athulya Ravi

  • review

    Sunaina

  • review

    Raashi Khanna

  • review

    Meena

  • review

    Sneha

  • review

    Dhanya Balakrishna

  • review

    Parvathy Menon

  • review

    Raai Laxmi

  • review

    Kushboo

  • review

    Shruti Haasan

  • review

    Sunny Leone

  • review

    Sneha

  • review

    Amala Paul

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.