ஏ ஸ்கேட்பார்க் ஃப்லிம்ஸ் மற்றும் மேக் ப்ரொடெக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் “ஸ்கேட்டர் கேர்ல் (SKATER GIRL)”. மஞ்சரி மக்கிஜானி எழுதி இயக்கியுள்ளார். சலீம் மற்றும் சுலைமான் இசையமைத்துள்ளனர். மஞ்சரி ம்க்கிஜானி, G.மோனிக் குமார் மற்றும் ஆலன் பூண் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தீபா பாட்டியா படத்தை தொகுத்துள்ளார். ரேச்சல் சஞ்சிதா குப்தா (பிரேமா) அமி மெஹ்ரா (ஜெஸிகா), ஜெனாதன் ரீட்வின் (ஏரிக்), ஷாஃபின் படேல் (அங்குஷ்) வாஹீதா ரெஹ்மான் (மகாராணி). அங்கித் ராவ் (விக்ரம்). மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு:
பல கிராமங்கள் இன்றும் நமது நாட்டில் பழமை மாறாமல் தன் அடையாளத்தை மாற்றிக்கொள்ள விரும்பாமல் இருக்கின்றன. அப்படிப்பட கிராமத்தில் தன்னம்பிக்கை, தைரியத்துடன் புதிய அடையாளத்தை தேடி பயனிக்கும் பெண்னைப்பற்றியது ஸ்கேட்டர் கேர்ல்
கதை:
ராஜஸ்தான் மாநிலத்தில் கெம்பூர் என்ற கிரமாம் சாதிய பிரச்சனை பழமைவாதம் என்று மூழ்கி கிடக்கின்றனது. அந்த கிரமாத்தில் பிரேமா என்ற பெண் இருக்கின்றாள். அவளுக்கு அங்குஷ் என்ற தம்பி மற்றும் தாய், தந்தையுடன் வாழ்ந்து வருகின்றாள். பிரேமாவின் தந்தை சராசாரி தாழ்த்தப்பட சமூகத்தை சேர்தவர். மிகவும் ஏழ்மையில் இருந்தாலும் பெண்கள் வேலைக்கு செல்வதை விரும்பாதவர். ஒரு பெண் என்பவள் ஆணுக்கு அடக்கியிருக்க வேண்டும் என்ற குணாதியசத்தை கொண்டவர். பிரேமாவின் தாய் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்ட சராசரி குடும்பத்த தலைவி.
கெம்பூர் கிராமத்திற்கு ஜெஸ்சிகா என்ற பெண் லண்டனிலிருந்து வருகின்றார். அங்கே விக்ரம் நடத்தி வரும் ஆசிர்வாத் கெஸ்ட் ஹவுஸில் அவள் தங்குகின்றாள்.லண்டன்வாடியான் அவரது தத்தா கெம்பூரில் இருக்கும் ஒரு தொழில்சாலையில் உயர்பதிவியில் இருந்தவர். தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு ஏழ்மை குடும்பம தலைவன் இறந்துவிட. மிகவும் ஏழ்மையில் இருக்கும் அந்த குடும்பத்தின் ஏழு வயது மகனை தத்தெடுத்து லண்டனில் வளக்கின்றார். அவரின் மகள் தான் ஜெஸிகா. தன் தந்தையின் கிராமத்தையும் தந்தை வாழ்ந்த ஊரையும் பார்க்க கெம்பூர் வருகின்றார்.
ஜெஸிகா பிரேமே மற்றும் அங்குஷை பார்க்கின்றாள். அவர்கள் மீது அன்பை பொழிகின்றாள். பள்ளிக்கு செல்ல வழியில்லாத பிரேமாவிற்கு துணி வாங்கி கொடுக்கின்றாள். அப்போது கிரமாத்தில் பேரிங்க் வைத்த வண்டியை அங்குஷ் மற்றும் பிரேமேவிடம் பார்க்கின்றாள். அந்த வண்டியில் அங்குஷை வைத்து இழுத்துக்கொண்டு செல்கின்றாள். அப்போது பிரேமாவிடம் இதுவும் ஒருவகை கிரமாப்புற ஸேகேட்டிங்க் என்று சொல்கின்றாள். பிரேமாவிற்கு ஸ்கேட்டிங்க் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்படுகின்றது.
அப்போது ஜெஸிகாவின் நண்பர் ஸ்கேட்டிங்க் வீரர் எரிக் அந்த கிராமத்துக்கு வருகின்றார். அவர் ஸ்கேட்டிங்க் செய்வதை பார்க்கும் கிராமப்புற குழந்தைகளுக்கு அவர்களும் ஸ்கேட்டிங்க் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகின்றது. அவரும் அனைவரையும் ஸ்கேட்டிங்க் செய்ய சொல்கிறார், குறிப்பாக பிரேமா ஸ்கேட்டிங்க் செய்யவதை எரிக் மற்றும் ஜெஸிகா ஆச்சரியமாக பார்க்கின்றனர். எரிக்க்கிற்கும் அந்த குழந்தைகளிடம் அன்பு ஏற்படுகின்றது.
பிரேமா தன் பள்ளியில் படிக்கும் ஆசிரியர் மகனான உயர் சாதி நண்பனுடன் கம்யூட்டரில் ஸ்கேட்டிங்க் பற்றி பார்க்கின்றாள். பிரேமாவின் நண்பனுக்கு அவள் மீது காதல் இருக்கின்றது பிரேமாவை அதிகமாக நேசிக்கின்றான்.
ஜெஸிகா நகர்ப்புறத்தில் இருந்து ஏராளமான ஸ்கேட்டங்க் பொருட்களை வாங்கி வந்து எரிக் உதவியுடன் உருவாக்கி கிராமப்புற குழந்தைகள் மற்றும் பிரேமாவிற்கு கொடுக்கின்றனர். ஜெஸிகா எரிக்கிடம் அந்த குழந்தைகளுக்கு ஸ்கேட்டிங்க் செய்ய கற்றுக்கொடுக்க சொல்கின்றாள்.
ஆனால் புது பிரச்சனை உருவாகின்றது. ஸ்கேட்டர் வந்தவுடன் குழந்தைகள் எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதில்லை. ஸ்கேட்டிங்க் செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர். அது மட்டுமின்றி சாலைகளில் ஸ்கேட்டிங்க் செய்வதால் விபத்து மற்றும் பல விரயங்கள் ஏற்படுகின்றனது.
பள்ளி தலைமை ஆசிரியர் போலிஸில் புகார் கொடுத்து ஸ்கேட்டிங்க் செய்ய தடை போடவைக்கின்றார். ஸ்கேட்டர்ஸை உருவாக்க நினைத்த ஜெஸிகாவிற்கு அது மனச்சோர்வை ஏற்படுத்துகின்றது. அதே போல் பிரேமா மற்றும் பிற குழந்தைகளும் அதனால் வெறுப்பாகின்றனர்.
பின் ஜெஸிகா அந்த கிராமத்தில் ஒரு ஸ்கேட்டிங்க் மைதானத்தை உருவாக்க நினைக்கின்றாள். கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர் விக்ரம் உதவியுடன் விளையாட்டு துறை அமைச்சரை சந்திகின்றார். அவரு இப்போது முடியாது பின்னர் பார்க்கலாம் என்று சொல்கின்றார். அதே விளையாட்டு குழுமங்களை அணுகுகின்றார். ஸ்கேட்டிங்க் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டில் இல்லை அதனால் உதவ முடியாது என்று சொல்கின்றனர்.
ஜெஸிகா மகாராணியை சந்திக்கின்றார். ஸ்கேட்டிங்க் மைதானாத்தின் மூலம் முகம் தெரியாத கிராமத்திலிருத்து பல திறமைசாலிகளை உருவாக்க முடியும், பல பெண்களை சர்வதேச அளவில் புகழ்பெறச்செய்ய முடியும் என்று சொல்கின்றாள். குறிப்பாக பிரேமாவின் திறமையை எடுத்து சொல்கின்றாள். மகாராணி தானும் ஒரு பெண் என்ற அடிப்படையில் கிராப்புற வளர்ச்சி என்ற நோக்கத்திலும் ஸ்கேட்டிங்க் மைதாணம் அமைக்க நிலம் கொடுக்கின்றார்.
ஜெஸிகா தன் நண்பன் எரிக் உதவியுடன் எரிக் நண்பர்களை வரவழைத்து ஸ்கேட்டிங்க் மைதானத்தை அமைக்கின்றனர். இதை கேள்விபட்ட விளையாட்டு துறை அமைச்சர் அங்கே ஒரு ஸ்கேட்டிங்க் போட்டியை நடத்த அறிவிக்கின்றார்.
ஸ்கேட்டிங்கில் கீழே விழுந்து பிரேமாவிற்கு அடிபடுகின்றது. அதுவரை தனது மகள் ஸ்கேட்டிங்க் செய்வது தெரியாமல் இருந்த பிரேமாவின் தந்தை அதற்கு காரணமான ஜெஸிகா திட்டுகின்றாள். இனி ஜெஸிகா ஸ்கேட்டிங்கிற்கு வரக்கூடாது என்று தடை போடுகின்றார். பிரேமாவிற்கு ஸ்கேட்டிங்க் மீது உள்ள ஈர்ப்பை புரிந்து கொண்ட பிரேமாவின் தாய் தன் மகளை கணவருக்கு தெரியாமல் ஸ்கேட்டிங்க் செய்ய அணுமதிக்கின்றாள்.
பிரேமா தன் நண்பனுடன் (காதலன்) யாருக்கு தெரியாமல் திருவிழாவிற்கு சென்று திரும்பும் போது பிரேமாவின் தந்தை பார்த்துவிடுகின்றார். உடனடியாக தன் மகளுக்கு தன் ஜாதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்கின்றார். என்றைக்கு ஸ்கேட்டிங்க் போட்டி நடக்கின்றதோ அன்றைக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகின்றது.
ஸ்கேட்டிங்க் மீது ஈர்ப்பு கொண்ட பிரேமாவிற்கு திருமனத்தில் விருப்பமில்லை. எப்படியாவது ஸ்கேட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றாள். தன் அறையை உடப்க்கம் தாழ்போட்டு கூரையை பிரித்து அங்கிருந்து தப்பித்து ஸ்கேட்டிங்க் மைதானத்திற்கு தப்பி செல்கின்றாள். மணப்பெண்னை காணத தந்தை அவள் ஸ்கேட்டிங்க் மைதாணத்திற்கு தான் சென்றிருப்பார் என்று அங்கே பிரேமாவின் தந்தையும் தாயும் செல்கின்றார். அங்கே பிரேமாவின் சாதனையை பார்த்து தந்தை வியக்கின்றார். தன் மகளின் திறமை பார்த்து பிரேமாவின் தந்தை பிரமித்து போகின்றார். அவள் முதல் பரிசை பெறுகின்றார். அது மட்டுமின்றி மகாராணியின் கைகளிலிருந்து தனிப்பட்ட முறையில் சிறப்பு பரிசையும் பெறுகின்றார்.
பாராட்டுக்குறியது:
ஒரு கிராமிய பின்னனியில் ஸ்கேட்டர் அடிப்படை இணைத்து அதற்காக அழகாக எழுதி, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
பிரேமாவாக கிராமப்புறத்திற்கேற்ற கதாப்பத்திரத்தில் ரேச்சல் சஞ்சிதா குப்தா நடிப்பு பாராட்டுக்குறிய ஒன்று. இது தான் அவரது முதல் படம். ஆனால் முதல் படம் போல் தெரியவில்லை.
ஒட்டுமொத்த கதையையும் ஜெஸிகாவாக நடித்து அழகாக படத்தை நகர்த்த அமி மெஹ்ரா உதவியுள்ளார். பிரிட்டீஸ் நாட்டு மாடல் மற்றும் நடிகையான அமி மெஹ்ராவை லண்டனில் இருந்து இந்தியா வந்தவராக காட்டியிருப்பது பொருத்தமானதாகவே உள்ளது.
பிரேமாவின் தம்பி அங்குஷாக ஷாஃபின் படேல் அழகாக நடித்துள்ளார்.
சல்மான்-சுலைமான் இசை நம்மை கிராமிய கதையுடன் இணைந்து பயனிக்க வைத்துள்ளனர்.
கிராமங்களின் பின்னனியில் சாதிய பிரச்சனை, ஆணாத்திக் மற்றும் பெண்னடிமைதனத்தை திரைக்தையில் குழைத்து பயனிக்கசெய்துள்ளது பாராட்டுக்குறியது/
பெரும்பாலும் விளையாட்டுக்களை அடிப்படையாக கொண்ட கதைகளில் ஒரு வில்லத்தனம்/அரசியல் கதாப்பாத்திரம் இருக்கும். ஆனால் இதில் எதார்த்த்தின் அடிப்படையில் வில்லத்தனம்/அரசியல் என்ற ஒன்று இல்லாமல் இருக்கின்றது.
நெருடலானவை:
ஸ்கேட்டிங்க அடிப்படையிலான கதையில் நாயகிக்கு ஸ்கேட்டிங்க் மீதுள்ள ஆர்வத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.
ஜெஸிகா கதாப்பாத்திரத்தின் பின்னனி கதை சுவராஸ்யம் இல்லாமல் கதை சொல்வதை போல் அமைத்துள்ளதால், அவர் கெம்பூரில் அவர் இருப்பதாக சொல்லப்பட்டிருப்பதில் அழுத்தம் குறைவாக உள்ளது.
கிராமிய பின்னனியில் மனம் லயிக்கும் அளவிற்கு ஸ்கேட்டார் அடிப்படையில் மனம் செல்ல மறுக்கின்றது.
தொகுப்பு:
ஸ்கேட்டர் அடிப்படையாக கொண்டு இந்தியாவில் முதன்முதலில் ஒரு படம். அழகான கவித்துவமான கதை களம்.. கிராமிய பட ரசிகர்களை நிச்சயம் கவரும்.
இந்த படம் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஒடிடி தளதத்தில் 11.06.2021 முதல் ஒளிபரப்பாகின்றது.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.
