Zee5 ஒரிஜினல் மற்றும் நார்த் ஸ்டார் சார்பில் ஷரத் மறார் தயாரித்துள்ள வெப்சீரிஸ் தொடர் எக்ஃஸ்பயரி டேட் (EXPIRY DATE).. ஷங்கர் மார்த்தான்ட் எழுதி இயக்கியுள்ளார் அணுப் ரூபன்ஸ் இசையமைத்துள்ளார். சுரேஷ் ரகுட்டு ஓளிப்பதிவு செய்துள்ளார். அருண் தச்சோத் படத்தை தொகுத்துள்ளார். 10 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த வெப்சீரிஸ். கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் காண வேண்டிய வெப்சீரிஸ். காரணம் கொலை, அவை சார்ந்த கொடூரம், ரத்தம், திகில் கொஞ்சம் ஆபாசம்.
பல்வேறு பத்திரிக்கைகளின் பாராட்டை பெற்ற இந்த வெப்சீரிஸ் Zee5 ஒடிடி தளத்தில் 02.10.2020 முதல் ஒளிபரப்பாகின்றது. ஹிந்தியில் உருவான இந்த தொடர் தமிழ் மொழியிலும் மொழிமாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் இந்த தொடரில் டோனி லூக் (விஸ்வா), சினேகா உல்லால் (திஷா), அலி ரேசா (சன்னி), மது ஷாலினி (சுனிதா), பரத் ரெட்டி (ACP தேவா) மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை கரு::
வாழ்கையில் துரோகம் செய்யும் மனைவியை கொல்லும் கணவன், துரோகம் செய்யும் கணவனை கொல்லும் மனைவி. அந்த கொலைகளை எப்படி மறைத்தார் என்பதை திகில் மற்றும் விறுவிறுப்புடன் சொல்லும் வெப்சீரிஸ் தான் எக்ஃஸ்பயரி டேட் (EXPIRY DATE)
கதை:
விஸ்வா மும்பையில் ஒரு மென்பொருள் நிறுவணத்தை நடத்தி வருகின்றான். அவன் தந்தையும் மிகபெரிய பிஸினஸ் மேன். ஆகாஷ் மற்றும் மோனிகா இருவரும் விஸ்வாவின் நண்பர்கள். ஆகாஷ் பைனாஸ் மேனஜராகவும் மோனிகா காரியதரிசியாகவும் (Secretary) பணிபுரிகின்றனர். மோனிகாவிற்கு விஸ்வாவின் மீது ஒரு தலைக்காதல் ஆனால் விஸ்வாவின் காதல் மனைவி திஷாவைத் தவிர வேறு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காதவன். விஷ்வா திஷாவிற்கு திருமண நாள் தன் மனைவியை ஆச்சரியப்படுத்த அவள் கண்விழிக்கும் போது கேக் மற்றும் வண்ண காகிதங்கள் தூவி வாழ்த்து சொல்கின்றான். ஆனால் திஷா அதில் விருப்பமில்லாமல் அவனை கடிந்து கொள்கின்றாள். சற்று வருத்ததுடன் அலுவலகம் செல்லும் விஸ்வாவிற்கு ஆகாஷ் மற்றும் மோனிகா திருமண நாள் வாழ்த்தை கூறி அவனை ஆச்சரியப்படுத்துகின்றனர். திஷா விஸ்வாவிற்கு போன் செய்து காலையில் கோபித்துக்கொண்டதற்கு வருத்தம் தெரிவிக்கின்றாள். இரவு ஹோட்டலுக்கு சென்று நம் திருமண நாளை கொண்டாடுவோம் என்று சொல்கின்றாள். விஸ்வா மிகுந்த சந்தோசம் அடைகின்றான். அதே நேரத்தில் ஆகாஷ் விஸ்வாவிடம் சென்று திஷா ரூ.12 லட்சம் பணத்தை அவள் வங்கி கணக்கில் செலுத்துமாறு சொன்னதாகவும் இதை உனக்கு தெரியால் பார்த்துக்கொள்ளுமாறு சொன்னதாக சொல்கின்றான். விஸ்வா அதொன்றும் பெரிய விஷயமில்லை மாற்றிவிடு என்று சொல்லிவிட்டு பார்ட்டிக்காக ஹோட்டலுக்கு செல்கின்றான். பார்ட்டி முடிந்து அங்கிருந்து கிளம்பும் போது ஒரு பைக்காரன் காரை பின்னால் எடுக்கும் போகும் காரில் இடித்துவிடுகின்றான். அந்த பைக்காரனுக்கும் திஷாவிற்கும் பெரிய சண்டை நடக்கின்றது. விஸ்வா திஷாவை சமாதனப்படுத்தி அழைத்து செல்கின்றான். அந்த சண்டையில் திஷாவை கொன்றுவிடுவதாக அந்த பைக்காரன் மிரட்டுகின்றான்.
எங்கே அந்த பைக்காரனால் திஷாவிற்கு ஆபத்து வரும் என்றெண்ணி இரவு முழுவதும் தூக்கம் வரமால் தவிக்கின்றான். அடுத்த நாள் காலை ஆபிஸ் செல்ல அவன் வீட்டை விட்டு கிளம்புகின்றான் தன் மனைவிக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் வீட்டின் கதை மூடிக்கொள்ள சொல்கின்றான். வீட்டை விட்டு கிளம்பும் போது முந்தைய இரவில் பார்த்த பைக்காரன் ஒரு கடையருகில் வண்டியை நிறுத்திவிட்டு அவன் வீட்டிற்குள் செல்ல முயல்வதை பார்க்கின்றான். பதட்டத்திலும் பயத்திலும் தன் காரை அப்படியே விட்டு விட்டு இவனும் வீட்டிற்குள் செல்கின்றான் தன் மனைவி திஷாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டு என்ற எண்ணத்தில். ஆனால் அந்த பைக்காரனை கண்டதும் திஷா ஹாய் சன்னி என்று கூறி கட்டியணைக்கின்றாள். இதை பார்த்த விஸ்வா உறைந்து போகின்றான். அவர்கள் பார்வையில் படமால் என்ன நடக்கின்றது என்று பார்க்கின்றான். இருவரும் படுக்கை அறைக்குயின் ஒன்றாக இருப்பதை பார்த்து அப்படியே உடைந்து போகின்றான். செய்வதறியாமல் குழம்பிப்போகிறான்.
ஒரு கட்டத்தில் தெளிந்து தன் மனைவியை கொலை செய்ய முடிவு செய்கின்றான் கொலைப்பழியை சன்னி மீது சுமத்த திட்டம் தீட்டுகின்றான். டிசம்பர் 17 திஷா தன் தோழி லதா அகர்வால் திருமணத்திற்க்கா புனே செல்வதை அறிகின்றான். அன்றே அவளை கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றான். திஷா குளிக்க செல்லும் போது அவள் லாப்டாப்பில் இருக்கும் திஷா சன்னி சார்ந்த அனைத்தையும் காப்பி செய்கின்றான். திஷாவின் கம்யூட்டரில் இருந்து புனே To மும்பைக்கு சன்னி பெயரில் ரயில் டிக்கட் புக் செய்கின்றான். சன்னியை அவனுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சென்று அவன் வீட்டை கண்டுபிடிக்கின்றான். திஷாவின் காரில் ஒளிந்து கொண்டு சென்று மும்பைக்கும் புனேக்கும் இடையில் யாரும் இல்லாத காட்டுப்பகுதியில் அவளை கொன்றுவிட்டு அருகில் இருக்கும் தனது ஃபார்ம் ஹவுஸில் புதைத்துவிட்டு புனே சென்று சன்னி பெயரில் புக் செய்த ரயில் டிக்கட்டில் மும்பைக்கு திரும்ப திட்டம் தீட்டுகின்றான்.
ஆனால் எதிர்பாரத விதமாக திஷாவுடன் விஸ்வாவுடன் ஏற்பட்ட தகராறில் திஷாவை பிடித்து தள்ள சுவரில் உள்ள கூர்மையான் கொம்பில் குத்தப்பட்டு இறந்து போகின்றாள். ஆனால் அதே நேரத்தில் திஷாவின் தங்கை நிஷா அவன் வீட்டுக்கு வருகின்றாள். அவளுக்கு தெரியாமல் திஷாவின் பிணத்தை மறைக்கின்றான். தனக்கு தலைவலி தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி தனது ரூம் கதவை உள்பக்கம் தாள் போட்டுவிட்டு ஜன்னல் வழியே வெளியில் வந்து திஷாவின் பிணத்தை முதலில் போட்ட திட்டப்படி ஃபார்ம் ஹவுசில் புதைக்கின்றான். காரை அருகில் இருக்கும் குளத்தில் தள்ளிவிடுகின்றான்.
திஷாவின் தங்கையின் பார்வையில் விஸ்வா அறைக்குள் இருந்ததாகவே நினைக்க வைக்கின்றான். நிஷாவும், விஸ்வாவும் திஷாவிற்கு போன் செய்ய முயற்சிக்க போன் அனைக்கப்பட்டுள்ளது. விஸ்வாவும், நிஷாவும் சேர்ந்த்து திஷா காணவில்லை என்று புகார் கொடுக்க காவல் நிலையம் செல்கின்றனர்.
அங்கே சுனிதா என்ற பெண்ணும் தன் கணவன் டிசம்பர் 17 லதா அகர்வால் திருமணத்திற்கு சென்ற கணவனை காணவில்லை என்று புகார் கொடுக்க வந்திருக்கின்றாள். அவள் கணவனின் பெயர் சன்னி என்று சொல்கின்றாள்.
அதிர்ச்சியடையும் விஸ்வா நிஷாவை வீட்டிற்கு அணுப்பிவிட்டு சுனிதாவை பின் தொடர்கின்றான். அப்போது தான் சுனிதா தன் கணவனை தான் அடிக்க எதிர்பாராமல் அவன் இறந்து போனதை சொல்கின்றான். தன் கணவன் சடலத்தை வீட்டில் புதைத்துள்ளஹ்டாக் தெரிவிக்கின்றாள். விஸ்வாவும் சுனிதாவும் ஒரே அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ளதால் அவளுடன் சேர்ந்து அவள் கணவன் சடலத்தையும் தன் ஃபார்ம் ஹவுஸில் புதைக்க உதவுகின்றான். ஆனால் சுனிதா தன் மொபைல் போனை சன்னியின் சடலத்தை புதைக்கும் போது தவறவிடுகின்றாள். விஸ்வா ஃபார்ம் ஹவுஸின் அருகில் இருக்கும் பெட்டிக்கடையில் சாவியிருப்பதாகவும் சைட் இண்ஜினியர் என்று சொல்லி சாவியை வாங்கி மொபைலை தேடி எடுத்துக்கொள்ளவும் சொல்கின்றான். அவளும் சென்று எடுத்துக்கொள்கின்றாள்.
விஸ்வாவின் தந்தையின் நண்பர் உயர்பதவியில் இருக்கும் போலிஸ் அதிகாரி திஷாவை கண்டுபிடிக்க காவல்துறையின் திறமையான போலிஸ் ACP தேவாவை இந்த கேஸை கண்டுபிடிக்க சொல்கின்றார். தேவா மிகச்சிறந்த போலிஸ் அதிகாரி இதுவரை எந்த வழக்கிலும் அவர் தோற்றதில்லை.
தேவாவின் விசாரணையில் திஷா மற்றும் சன்னிக்கு தொடர்புள்ளதாகவும் அவர்கள் இருவரும் விஸ்வா மற்றும் சுனிதாவை ஏமாற்றி ஊரைவிட்டு ஓடிவிட்டதாக முடிவுக்கு வரும் சூழலில் திஷா மற்றும் சன்னியின் பிணத்தை ஃபார்ம் ஹவுஸில் இருந்து கைப்பற்றுகின்றனர்.
ஊரைவிட்டு ஓடி போனவர்கள் எப்படி கொலைசெய்யப்படனர் என்பதை கண்டுபிடிக்க தேவா முயல்கின்றார்.
இதற்கிடையில் விஸ்வா தன் மனைவியை கொலை செய்ததை போட்டவாக எடுத்த வாடகை கொலையாளியும் கொலையாளியின் தோழியும் போட்டோ எடுத்து ரூ.2 கோடி கேட்டு மிரட்டுகின்றான். வேறு வழியில்லாமல் ரூ.2 கோடி கொடுக்க ஒத்துக்கொள்கின்றான் விஸ்வா. அந்த கொலையாளி விஸ்வாவை மட்டுமல்ல சுனிதாவிடமும் ரூ.2 கோடி கேட்டு மிரட்டுகின்றான். அவன் மீது சந்தேகம் கொண்ட விஸ்வாவும் சுனிதாவும் வாடகை கொலையாளியையும் எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று கள்ள சந்தையில் டயனமெண்ட் வெடிகுண்டை வாங்குகின்றனர்.
எப்படி கொலை செய்ததை போட்ட எடுத்தாய் என்று கொலைகாரனிடம் விஸ்வா கேட்ட போது. உண்மையில் உன்னை கொலை செய்ய திஷா மற்றும் சன்னியால் நியமிக்கப்பட்ட கொலைகாரன் நான், உன்னை கொலை செய்ய வீட்டிற்கு வரும் போது தான் நீ உன் மனைவியை கொலை செய்வதை பார்த்ததாகவும் அது முதல் உன்னை பின் தொடர்வதாகவும் சன்னி கொலையை மறைக்க முயன்றதையும் வீடியோ எடுத்ததாகவும் சொல்கின்றான். அவன் வண்டியில் பாம் வைத்து கொலைசெய்ய எடுத்த முயற்சியில் தோற்றுப்போகின்றனர் விஸ்வாவும் சுனிதாவும்.
ஊரைவிட்டு ஓடிப்போன திஷாவும் சன்னியும் எப்படி கொலைசெய்யப்பட்டனர் என்ற புலனாய்வில் இருக்கும் ACP தேவாவிற்கு திஷாவின் போன் ரெக்கர் மூலம் வாடகை கொலையாளியை தொடர்பு கொண்டது தெரியவருகின்றது. அந்த வாடகை கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்ய தேவா போலிஸ்படையுடன் செல்கின்றார். ஆனால் வாடகைக்கொலையாளி அங்கிருந்து தப்பிக்கின்றான்.
தனது ரூ.4 கோடி பணத்தை பெற சுனிதாவின் வீட்டிற்கு வாடகை கொலையாளி வருகின்றான். ஆனால் அங்கே சுனிதாவும் விஸ்வாவும் அவனை சுட்டுக்கொள்கின்றனர்.
வாடகை கொலையாளியை கொன்ற குற்றத்திற்காக விஸ்வா மற்றும் சுனிதாவை போலிஸ் கைது செய்கின்றது. அவனை கொலை செய்ய காரணத்தை போலிஸ் விசாரிக்கின்றது. அப்போது தன் மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை எடுத்து சன்னி பணம் கேட்டு மிரட்டுவதாகவும், தன் குடும்ப கௌரவத்தை காப்பாற்ற சன்னி கொலைசெய்ய வாடகை கொலையாளியை திஷா நியமித்ததாகவும். எதிர்பாரவிதமாக திஷாவை சன்னி கொன்றுவிட்டதாகவும். சன்னியை பணத்திற்காக கொலை செய்ய ஒப்புக்கொண்ட கொலையாளி சன்னியையும் கொன்றதாகவும். கொலைக்கான பணத்தை கேட்டு கொலையாளி மிரட்டியதாகவும் இல்லையென்றால் என் குடும்ப கௌரவத்தை கெடுத்துவிடுவதாக கொலையாளி சொன்னான் அதனால் தான் பணம் கொடுக்க ஒப்புக்கொண்டு அவனை சுனிதா வீட்டிற்கு வரச்சொல்லி கொடுக்க முயலும் போது. கொலையாளி சுனிதாவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததால் வேறுவழியில்லாமல் வாடகை கொலையாளியை கொன்றதாக சொல்கின்றான்.
தன் கணவன் விஸ்வாவிற்கு தனக்கும் செய்த துரோகம் காரணமாக தான் விஸ்வாவிற்கு உதவி செய்ததாகவும் கொலைகாரன் தன்னிட தவறாக நடந்து கொல்ல முயற்சித்த காரணத்தால் அவனை கொல்ல நேர்ந்ததாகவும் சுனிதா காவல்துறையில் வாக்குமூலம் கொடுக்கின்றாள்.
வாடகை கொலைகாரணை கொலைசெய்த காரணத்திற்காக விஸ்வாவிற்கு ஒராண்டு சிறை தண்டனையையும் அதற்கு துணைபுரிந்த சுனிதாவிற்கு 6 மாதம் சிறை தண்டனையையும் நீதிமன்றம் விதிக்கின்றது.
ஆறு மாதத்திற்கு பிறகு விடுதலையான சுனிதா தன் தந்தையுடன் வேறுவீட்டிற்கு இடமாறி சென்றுவிட்டாள். ஒராண்டு கழித்து விடுதலையான விஸ்வாக சுனிதாவை தேடிச்செல்லும் போது அவள் வீட்டில் இல்லை என்பதை விஸ்வா உணர்கின்றான். பின் சகஜ வாழ்கைக்கு திரும்பிய விஸ்வா தன்னை ஒருதலையாக காதலித்த மோனிகாவுடன் வாழ்கையை தொடங்க முயல்கின்றான்.
ஆனால் ACP தேவாவிற்கு இந்த கொலையில் விஸ்வாவிற்கு எதிரான முக்கிய ஆதாரம் கிடைக்கினிறது. மீண்டும் இதை விசாரணை செய்ய முயல்கின்றார்.
இதனிடையே வாடகை கொலையாளியின் தோழி விஷ்வாவை கடத்தி கொலை செய்ய முயற்சிக்கின்றாள். ஆனால் விஸ்வா அவளை கொலை செய்து தப்பிக்கும் போது சுனிதாவை பார்க்கின்றான். அப்போது சுனிதா தேவா இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கின்றார். ஜாக்கிரதையாக இருக்க சொல்கின்றாள். விஸ்வாவிற்காக ஒரு பரிசு கொடுக்கின்றாள். அந்த பரிசை எடுத்துக்கொண்டு காரில் விஸ்வா கிளம்பும் போது கார் வெடிக்கின்றது. சுனிதா தான் பாம் வைத்து விஸ்வாவை கொலை செய்கின்றாள். காரணம் இந்த வழக்கின் தேவா சந்தேகப்பட்டு மீண்டும் விசாரணையை தொடங்கவிருப்பது விஸ்வாவிற்கு எதிராகதான். விஸ்வா உயிரோடு இல்லையேன்றால் சுனிதாவிற்கு எந்த பிரச்சனையும் வராது.
பாராட்டுக்குறியது:
ஒரு காட்சிகள் ஒவ்வொரு சம்பவங்கள் என்று எதிர்பாரத பல்வேறு திருப்பங்களுடன் காட்சியமைத்துள்ளார் இயக்குனர்,
விஸ்வாக நடிததுள்ள டோனி லூக் அந்த கதாப்பாத்திரத்தை உணர்ந்து மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
சுனிதாவாக நடித்துள்ள மது ஷாலினி டோனி லூக்கிற்கு இணைய நடித்து கதையை நகர்த்தியுள்ளார்.
ACP தேவ்வாக நடித்திருக்கும் பரத் ரெட்டி புலணாய்வு அதிகாரியாக கெத்தாக நடித்துள்ளார்.
திஷாவாக நடித்துள்ள சினேகா உல்லால் சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார்.
எந்த இடத்திலும் தொய்வே இல்லாமால் இறுதிவரை பல திருப்பங்கள் விறு விறுப்பிற்கு குறையில்லாமல் செல்கின்றது.
கிரைம் திரில்லர் படத்திற்குள்ள அனைத்து அம்சங்களை குறைவில்லாமல் கொடுத்துள்ளனர்.
நெருடலாணவை:
ஃபார்ம் ஹவுஸ் அருகில் கடை வைத்திருக்கும் நபர் சுனிதாவை முதலில் அடையாளம் காட்டுகின்றார். தீடீரென அவர் பல்டியடிக்கும் படி ஒரு காட்சியமைப்பு உள்ளது. அந்த தீடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?
ஆரம்பம் முதலே சுனிதாவிற்கு கொலையை மறைக்க செய்யும் காரியங்களில் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் இறுதி காட்சியில் துணிந்து ஒரு கொலையை செய்வதையும் அந்த தீடீர் மாற்றத்திலும் ஒரு சிறு நெருடல் இருக்கின்றது.
இறுதி காட்சியில் சுனிதா எப்படி அங்கு வந்தாள், விலை உயர்ந்த காரில் அவள் வந்தது எப்படி, அவளுக்கு பணம் கொடுத்தது யார் என்ற தெளிவு இல்லை.
காரியதரிசியாக வரும் மோனிகா மிகப்பெரிய சொகுசு பங்களாவில் வாழ்வது எப்படி. இந்த சந்தேகத்தை ACP தேவாவும் கேட்பது போல் காட்சியமைத்து இருப்பார்கள். ஆனால் அதற்கான விடைகளே இல்லாமல் இறுதிவரை இருக்கின்றது.
தொகுப்பு:
மிகமிக நுண்ணிய சந்தேகங்கள் இந்த கதையில் இருந்தாலும் அவைகள் கதையை எந்த வகையிலும் சிதைக்கும் அளவில் இல்லை என்பதே உண்மை.
மொத்தத்தில் இந்த ஊரடங்கு காலத்தில் தொய்வில்லாமல் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எக்ஃஸ்பயரி டேட் (EXPIRY DATE) வெப்சீரிஸ் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இந்த வெப்சீரிஸ் Zee5 ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கின்றது.
BEST CRIME THRILLER STREAMING IN Zee5
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.
