
Article by : Admin on 06-09-2021
Passion ஸ்டுடியோ சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரித்திருக்கும் படம் அனபெல சேதுபதி . தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.
அனபெல சேதுபதி படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி பன்னு, யோகி பாபு, ராதிகா சரத்குமார், தேவர்தர்சினி, சுப்பு பஞ்சு, மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அனபெல சேதுபதி படத்தில் உமா தேவி எழுதிய வானில் “போகும் மேகம்” பாடலை கிருஷ்ணா கிஷோர் இசையில் அர்மான் மாலிக் மற்றும் சின்மயி பாட விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி பன்னு, நடிப்பில் உருவான பாடல் வீடியோ இன்று (06.09.2021) வெளியிடப்பட்டுள்ளது/
ஓரு ஃபேன்டசி, திகில், குடும்பப்படம், காமெடி என்று அனைத்தையும் கலந்து 1948 மற்றும் 2021 ஆகிய காலகட்டங்களின் கதைக்களத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளதாக டீசர் உணர்த்துகின்றது. டீசரின் பிரமாண்டம் நிச்சயம் படத்தின் மீது ஈர்ப்பை உருவாக்கும் அடிப்படையில் உள்ளது.
அனபெல சேதுபதி படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 17.09.2021 முதல் ஒளிபரப்பாகவுள்ளது
