Join/Follow with Our Social Media Links

கிருத்திகா உதயநிதி இயக்கிய நாட்படுதேறல்.01

Article by : Admin on 24-05-2021

“நாட்படு தேறல்” கவிஞர் வைரமுத்துவின் 100 கவிதை தொகுப்பு. இந்த பாடல் தொகுப்புகளை ஆல்பமாக கவிஞர் வைரமுத்து தயாரித்துள்ளார். இதின் சிறப்பம்சம் 100 பாடல்களை 100 பேர் இசையமைத்துள்ளனர். 100 பேர் இயக்கியுள்ளனர்.

பல்வேறு உள்ளடக்கங்களை கொண்டுள்ள இந்த தொகுப்பில் முதல் பாடலாக “நாக்கு செவந்தவரே” காதலித்து கைவிட்டவனை காதலி கேள்வி கேள்வி கேட்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் இதற்கு வகு மஸன் இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தை தொகுத்துள்ளார். தஸ்தா நடனமைத்துள்ளார். மூர்த்தி உடையழங்காரம் செய்துள்ளார். வகு மஸன் பாடியுள்ளார்.

கிருத்திகா உதயநிதி இதை இயக்கியுள்ளார். இதில் வகு மஸன், ப்ரீத்தி கரண், சக்தி வெங்கட்ராஜ், கோடில் வெஸ்லி, ஜோயல் ப்ரித்வி, கேசவ் மற்றும் விஜயலக்ஷ்மி நடித்துள்ளனர்.

பாடல்:

நாக்குச் செவந்தவரே

நாலெழுத்து மந்திரியே

மூக்கு வெடச்சவரே

முன்வழுக்கை மன்னவரே

 

கூத்து முடிஞ்சிருச்சு

கொமரிப்புள்ள எதுக்குன்னு

பாத்தும் பாக்காமப்

பரபரன்னு போறீரோ!

 

ஒருவாய் வெத்தலைய

இருவாய் உண்டகதை

திருவாய் மறந்தாலும்

தின்னருசி மறந்திருமோ?

*

வைக்கப் போர்ப் படப்புக்கு

வடஇருட்டு மூலையில

அக்கப்போர் செஞ்சகதை

அய்யனுக்கு மறந்திருச்சோ?

 

சவரக் கத்திக்குத்

தப்பிச்ச குறுமுடியில்

முகர ஒரசுனது

முழுசாத்தான் மறந்திருச்சோ?

 

மொட்டு மொட்டு மல்லிகையை

முட்டிமுட்டித் தட்டிவிட்டு

முத்துமுத்து வேர்வைச் சொட்டு

மோந்தகதை மறந்திருச்சோ?

 

வாழைத் தோப்புக்குள்ள

வளவி ஒடச்சகதை

வாழை மறந்திருக்கும்

வலதுகையி மறந்திருமோ?

*

தேனேறிப் போயிருந்த

சிறுக்கிமக தலைமயிரு

பேனேறிப் போனதய்யா

பேச்சுவார்த்தை இல்லாம

 

புள்ளித் தேமலுக்கும்

புதுவேட்டி மடிப்புக்கும்

கருப்பட்டி ஒதட்டுக்கும்

கருத்தகிளி அலையுதய்யா

 

ஆறுசரம் சங்கிலியோ

அட்டிகையோ கேக்கலையே

மஞ்சக் கயித்துக்கு

மனசுக்குள்ள அரிக்குதய்யா

 

ஆம்பளைக சகவாசம்

அடுத்தொருத்தி வாரவரைக்கும்

பொம்பளைக சகவாசம்

புதைகாடு போறவரைக்கும்

*





Movie Gallery

  • news

    Arundhati

  • news

    Meena

  • news

    Vidya Pradeep

  • news

    Mirnalini Ravi

  • news

    Kareena Kapoor

  • news

    Kausalya

  • news

    T J Bhanu

  • news

    Parvathy Menon

  • news

    Ananya

  • news

    Aishwarya Rajesh

  • news

    Ineya

  • news

    Janani Iyer

  • news

    Sayyeshaa

  • news

    Raiza Wilson

  • news

    Deepika Padukone

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.