Join/Follow with Our Social Media Links

அனிகா சுரேந்திரன் நடிக்கும் மனதை மயக்கும் பாடல் ஆல்பம்.. நாட்படு தேறல் - 06

Article by : Admin on 23-05-2021

“நாட்படு தேறல்“ கவிஞர் வைரமுந்துவின் 100 பாடல்கள் தொகுப்பு. இந்த பாடல்கள் ஆல்பமாக வைரமுத்து தயாரித்துள்ளார். இதில் சிறப்பம்சம் 100 பாடல்கள் 100 இசைமைப்பாளர்கள் 100 இயக்குனர்கள் இந்த தொகுப்புகளை வைரமுத்து தயாரித்துள்ளார்.

பல்வேறு உள்ளடக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த பாடல் தொகுப்பில் ஆறாவது பாடல் ஒரு வயதில் மூத்த ஒருவரை இளம் பெண் காதலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த பாடல் நெஞ்சை வருடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் நாயகியாக அனிகா சுரேந்திரன் மற்றும் யோகன் சாக்கோ நடித்துள்ளார். இந்த பாடலுக்கு N.R.ரகுநாதன் இசைமைத்துள்ளார். ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளார். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். R.வசந்தகுமார் படத்தொகுப்பை செய்துள்ளார். ஜெனிப்பர் மரியா உடையழங்காரம் செய்துள்ளார், அபிநயா கார்த்திக் நடனம் அமைத்துள்ளார். இயற்கை சூழலில் பின்னனியில் இதை விழிகளுக்கு அழகாக விஜய் இயக்கியுள்ளார். இந்த பாடலின் ஒளி மற்றும் ஒலித்தொகுப்பு உங்கள் விழிகளுக்கும் செவிகளுக்கும் விருந்தாக

பாடல் வரிகள் :

என் காதலா

காதல் வயது பார்க்குமா?

நானும்

சின்னக் கன்று என்று இன்று

சிந்தை மாறுமா?

 

வயதால் நம்

வாழ்வு முறியுமா?

வாய் முத்தம்

வயது அறியுமா?

 

நிலா வெண்ணிலா

வயதில் மூத்ததில்லையா

இருந்தும்

நிலவு சொல்லி இளைய அல்லி

மலர்வதில்லையா?

 

என்வாழ்வில் தந்தை இல்லையே!

தந்தைபோல் கணவன் வேண்டுமே! *

 

ஆணும் பெண்ணும் சேர்வது

ஆசைப் போக்கில் நேர்வது

காதல் நீதி என்பது

காலம் தோறும் மாறுது

 

வெட்டுக்கிளியின் ரத்தமோ

வெள்ளையாக உள்ளது

விதிகள் எழுதும் ஏட்டிலே

விதிவிலக்கும் உள்ளது

 

ஆழி ரொம்ப மூத்தது

ஆறு ரொம்ப இளையது

ஆறு சென்று சேரும்போது

யாரு கேள்வி கேட்பது? *

 

காதல் சிந்தும் மழையிலே

காலம் தேசம் அழியுதே

எங்கே சிந்தை அழியுதோ

காதல் அங்கே மலருதே!

 

அறிவழிந்து போனபின்

வயது வந்து தோன்றுமா?

பொருள் அழிந்து போனபின்

நிழல் கிடந்து வாழுமா?

 

அறமிருக்கும் வாழ்விலே

முரணிருக்கும் என்பதால்

முரணிருக்கும் வாழ்விலும்

அறமிருக்கும் இல்லையா?

*





Movie Gallery

  • news

    Devayani

  • news

    Raai Laxmi

  • news

    Sanghavi

  • news

    Manju Warrier

  • news

    Esther Anil

  • news

    Shraddha Srinath

  • news

    Nayanthara

  • news

    Meghashree

  • news

    Ritu Varma

  • news

    Shruti Haasan

  • news

    Megha Akash

  • news

    Kushboo

  • news

    Ineya

  • news

    Amy Jackson

  • news

    Regina Cassandra

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.