Join/Follow with Our Social Media Links

நடிகர் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்கின்றாரா கீர்த்தி சுரேஷ்,???

Article by : on 29-04-2021

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப்படங்களில் முன்னனி கதாநாயகியாக நடித்துக்கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவருக்கு நடிப்பிற்கு தீனிபோடும் கதாபாத்திரம் கிடைத்தால் போதும் எவ்வகையான கதாப்பாத்திரத்திலும் நடிக்ககூடியவர். இவரது நடிப்பில் வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்ற படம் மகாநதி (தெலுங்கு) (நடிகையர் திலகம்-தமிழ்), பென்குயின் படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் மற்றொரு குழந்தையை கருவில் சுமப்பவராகவும் நடிதிருப்பார். அதுவும் மிகவும் புகழ் பெற்ற இயக்குனர் ஒருவரது படத்தில் வலுவான கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருப்பாரா என்ன?

ஜெயம் ரவி தமிழில் மிகவும் பிரபலமான வெற்றிப்பட நடிகர். ஜெயம் தொடங்கி கோமாளி வரை இவரது வெற்றிப்பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருகின்றது. இரண்டு பிரபல நட்சத்திரங்கள் கதாநாயகன் கதாநாயகியாக இல்லாமல் அக்கா தம்பியாக நடிக்கின்றார் என்றால் அந்த படம் எப்படிப்பட்ட படமாக இருக்க வேண்டும்.

அமரர் கல்கியின் “பொன்னியின் செல்வன்” சரித்திரகதை தமிழ் சரித்திர நாவல்களில் மட்டுமல்ல உலகிலேயே எந்த சரித்திர நாவல்களும் இதைவிட சிறந்ததாக இருக்க முடியாது. மகாபாரதம் இதிகாச கதைக்கு இணையாக புகழ் பெற்ற இந்த சரித்திரக்கதையை பலர் படமாக எடுக்க முயற்சித்தானர். ஆனால் நாவல் தன்மை சிதையாமல்  எடுக்க முடியாது என்ற பயத்தில் பலரும் அந்த முயற்சியை கைவிட்டனர்.. இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் புகழ்பெற்ற இந்திய இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தை இயக்குகின்றார். இவர் ஏராளமான படங்களை இயக்கியிருந்தாலும், இவர் இயக்கும் முதல் சரித்திரப்படம் இது தான்.

பொன்னியின் செல்வன் கதையின் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும் அழகாக செதுக்கியிருப்பார் அமரர் கல்கி. அந்த கதாப்பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கேற்ப இயக்குனர் மணிரத்னம் அவர்களும் நடிகர்களை தெரிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் கதையின் முக்கிய கதாப்பாத்திர்ங்களில் குறிப்பிடப்பட வேண்டியவை குந்தவை தேவி மற்றும் அவரது இளைய சகோதரன் (தம்பி) அருள் மொழி வர்மன்.

கதாப்பாத்திரங்களை அமரர் கல்கியின் எழுத்தோட்டத்திற்கு இணையாக உயிர்கொடுக்க மணிரத்னம் குந்தவை தேவி கதாபாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷையும் அவரது தம்பி அருள் மொழி வர்மன் கதாபாத்திரத்திற்கு ஜெயம் ரவியையும் தேர்தெடுத்துள்ளார்.

இந்த படம் இந்திய அளவில் ,மட்டுமல்லாது உலக அளவிலும் பெரிய எதிர்பாப்பை பெற்றுள்ளது..





Movie Gallery

  • news

    Trisha Krishnan

  • news

    Ritu Varma

  • news

    Regina Cassandra

  • news

    Madhu Shalini

  • news

    Charmy Kaur

  • news

    Dia Mirza

  • news

    Sanjana Natarajan

  • news

    Madhuri Jain

  • news

    Ramya Krishnan

  • news

    Nikki Galrani

  • news

    Huma Qureshi

  • news

    Lakshmi Gopalaswamy

  • news

    Oviya Helen

  • news

    Malavika Mohanan

  • news

    Charmy Kaur

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.