Article by : Admin on 14-05-2021
எட்செட்ரா நிறுவணம் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் U.R.ஜமீல் எழுதி , திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள திரைப்படம் மஹா. ஜிப்ரான் இசையமைத்துள்ளார். R.மதி ஒளிப்பதிவு செய்ய ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பை செய்துள்ளார்.
இந்த படத்தில் ஹன்சிகா மோட்வானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். ஸ்ரீகாந்த, பிரியா ஆனந்த், சனம் ஷெட்டி, தம்பி ராமையா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். சிறப்பம்சமாக இந்த படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
வாலு திரைப்படத்தின் போது இருவரும் காதலித்து வந்ததும், பின் அந்த காதல் பிரிந்ததும் அனைவருக்கும் தெரிந்ததே. காதல் பிரிவிற்கு பின் மீண்டும் சிம்புவும் ஹன்சிகா மோட்வானி இணையும் படம் இது.
இந்த திரைபடம் ஹன்சிகா மோட்வானிக்கு 50 வது படம். 2019-ல் நூறு படம் தமிழில் வெளியானது அது பெரிய அளவிற்கு வெற்றி பெறவில்லை. நீண்ட நாளாக இழுபறியில் இருந்த படம் மஹா. இதன் முதன் போஸ்டரில் அஹோரி பாணியில் புகைப்பிடிப்பது போல அவர் இருந்த போஸ்டர் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல் ரத்தம் நிரப்பிய குளியல் தொட்டியில் கையில் துப்பாக்கியுடன் இருந்தது அடுத்த சர்ச்சையாக மாறியது.
கொரனா சூழ்நிலையில் படபிடிப்புகள் பாதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த சூழலில் பல்வேறு பிரச்சனைக்களுக்கிடையே இந்த படத்தின் படபிடிப்பு அக்டோபர் (2020) மாதம் நிறைவடைந்தது. திரையரங்கள் கொரனா சூழலில் மூடப்பட்டத்தால் இந்த திரைப்படமும் முன்னனி ஒடிடியில் (டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிப்பரப்பாவதாக தகவல் கசிந்துள்ளது) வெளியிட பேச்சுவார்த்தை நடந்து முடிவடைந்துள்ளது.
இந்த சூழலில் தயாரிப்பாளருக்கு அடுத்த சிக்கல் உருவாகியுள்ளது.. அந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை மேற்கொண்ட U.R.ஜமீல் தான் தயாரிப்பாளருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். இந்த திரைப்படத்தை திரையிட தடை கோரியுள்ளார்.
வழக்கின் சராம்சம் என்னவென்றால் மஹா திரைப்படத்திற்கு தேவையான காட்சிகளை எடுக்காமல் தன் (U.R.ஜமீல்) உதவி இயக்குனரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும், தனக்கு தெரியாமல் படத்தொகுப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்து திரையிட முயற்சி நடைபெற்றுவருவதாகவும்,. அதுமட்டுமின்றி தனக்கு பேசிய ரூ.24 லட்சம் சம்பளத்தில் ரூ.8.15 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளனர். எனவே மீதி சம்பளத்தையும் என் கதைக்கருவை வேறு ஒருவரை வைத்து எடுத்தற்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சத்தையும் தர வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மே-19 க்குள் பதில் அளிக்குமாறு தயாரிப்பு நிறுவணத்திற்கும் உதவி இயக்குனர் அஞ்சு விஜய், படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்,
தயாரிப்பாளர் உதவி இயக்குனரை வைத்து படத்தை எடுக்க காரணம் என்ன? இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே நடத்த மோதல் என்ன? திரையிடத்தொடங்கும் போது இது போன்ற வழக்குகள் தொடுப்பது தொடர்கதையாக இருப்பது திரையுலகுக்கு நல்லதா? பலகோடி முதலீடுகள் செய்யும் தயாரிப்பாளார்கள் கொஞ்சம் இது போன்ற விளைவுகளை படம் வெளியிடுவதற்கு முன்பே பேசி தீர்த்துகொள்வது நல்லது.
இதன் டீசர் வெளிவந்து ஒரு வருடத்திற்கு மேலாகின்றது.