Join/Follow with Our Social Media Links

மணிரத்னம் வெப்சீரிஸ் நவரசா நெட்ஃபிலிக்ஸில்…

Article by : Admin on 09-07-2021

ஆந்தாலஜி எனப்படும் குறும்படத்தொகுப்பு ஏராளமாக ஒடிடி தளங்களில் ஒளிபரப்பாகின்றது. அந்த அடிப்படையில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் தொடர்தான் “நவரசா”.இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேஷன் குயூப் சினிமா டெக்னாலஜிஸ் இணைந்து தயாரித்துள்ள ஆந்தாலஜி வெப்சீரிஸ் தான் “நவரசா”. நவரசம் என்பது ஒன்பது உணர்வுகள் குறிப்பதாகும். இந்த வெப்தொடரையும் ஒன்பது இயக்குனர்கள் இயக்கியுள்ளார்கள். இந்த தொடரின் நடிகர்கள் டெக்னீஷியன்கள் மற்றும் இயக்குனர்கள் சம்பளமின்றி தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர். தயாரிப்பு செலவீனங்களை மட்டுமே தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டனர். இதில் வரும் லாபம் முழுவதையும் FEPSI சங்கத்திற்கு கொடுக்க முன் வந்துள்ளனர். கொரனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்கள் குடும்பத்திற்கு கொடுக்க முன்வந்துள்ளனர். இந்த வெப்தொடர்களுக்கு A.R.ரஹ்மான், D.இமான், ஜிப்ரான், அருள் தேவ், கார்திக், ரோன் ஈதன் யோகன், கோவிந்த் வசந்தா மற்றும் ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளனர். PC ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், பாலசுப்ரமணியன், மனோஜ் பரமஹம்ஷா, அபிநந்தன், ராமணுஜம், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, ஹர்ஷ்விர் ஓப்ராய், சுஜித் சாரங், V.பாபு, விரஜ் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பட்டுக்கோட்டை பிரபாகர், செல்வா, மதன் கார்கி, சோமிதரன் கதைகளை எழுதியுள்ளனர்.

1.இன்மை:

ரத்தின்ரன் R பிரசாத் இயக்கியுள்ள இந்த தொடரில் சித்தார்த், பார்வதி மேனன் (பூ பார்வதி திருவொத்து), பவேல் நவகீதம், அம்மு அபிராமி (தீரன் அதிகாரம் ஒன்று கார்த்தியின் சகோதரி, ராட்சசன், அசுரன்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

2.ரௌத்ரம்:

அர்விந்த் சாமி இயக்கியுள்ள இந்த தொடரில் ரித்விகா, ஸ்ரீ ராம், அபிநயாஸ்ரீ, ரமேஷ்திலக், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

3.எதிரி:

பிஜோய் நம்பியார் இயக்கியுள்ள இந்த தொடரில் விஜய சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி அசோக் செல்வன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

4.கிடார் கம்பி மேலே நின்று:

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த தொடரில் சூர்யா, பிரயாக மார்டின் (பிசாசு படத்தில் நடித்தவர்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

5.துணிந்த பின்:

சர்ஜுன் KM இயக்கியுள்ள இந்த தொடரில் அதர்வா, அஞ்சலி, கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

6.சம்மர் ஆஃப் ’92:

பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த தொடரில் யோகிபாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு, மணிகுட்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

7.புராஜெக்ட் அக்னி:

கார்திக் நரேன் இயக்கியுள்ள இந்த தொடரில் அர்விந்த் சாமி, பிரசன்னா, சாய் சித்தார்த், பூர்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

8.பீஸ்:

கார்த்திக் சுப்ராஜ் இயக்கியுள்ள இந்த தொடரில் பாபி சிம்ஹா, கவுதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண், சன்னத் ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

9.பாயாசம்:

வசந்த இயக்கியுள்ள இந்த தொடரில் அதிதி பாலன் (அருவி பட நாயகி), ரோகின், டில்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திரையுலக தொழிலாளர்கள் நலம்

 

இந்த வெப்சீரீஸ் தொடர் 06.08.2021 முதல் நெட்ஃபிலிக்ஸ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.







Plots For Sale in Chennai
Plots For Sale in Chennai
Explore verified Plots For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/plots-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Puvisha Manoharan

  • news

    Bhavana

  • news

    Sanjitha Shetty

  • news

    Raashi Khanna

  • news

    Andrea Jeremiah

  • news

    Devayani

  • news

    Mumtaj

  • news

    Parvathy Omanakuttan

  • news

    Meera Jasmine

  • news

    Subiksha

  • news

    Janani Iyer

  • news

    Varalaxmi Sarathkumar

  • news

    Parvathy Omanakuttan

  • news

    Anu Emmanuel

  • news

    Sunny Leone

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.