வி ஹவுஸ் புரொடெக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு எழுதி இயக்கியுள்ளார். ஐந்தாண்டுகளுக்கு பிறகு திரையரங்கத்தில் வெளியாகவுள்ள வெங்கட் பிரபுவின் இந்த படம். 2016 டிசம்பரில் இவரின் சென்னை 28 ன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரமேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் K L படத்தை தொகுத்துள்ளார்.
மாநாடு திரைப்படத்தில் T R சிலம்பரசன் அப்துல் கலீக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்சன் சீதா லக்ஷ்மி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். S J சூர்யா போலிஸ் கமிஷ்னர் தனுஷ்கோடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். S A சந்திரசேகர் முதலமைச்சர் அறிவழகன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்., Y G மகேந்திரன் மூத்த அரசியல்வாதி பரந்தாமன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கருணாகரன் அப்துல் கலீக் நண்பன் சையது பாஷா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரேம்ஜி அமரன் அப்துல் கலீக் நண்பன் ஈஸ்வர மூர்த்தி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அஞ்ஜனா கிர்தி ஈஸ்வர மூர்த்தி காதலி ஜரீனா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மனோஜ் பாரதிராஜா போலிஸ் இண்ஸ்பெக்டர் ஜான், அரவிந்த் ஆகாஷ் கொலைகாரன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டேனியல் அனி போப் முதலமைச்சரை கொல்லவிருக்கும் கொலையாளியாக ரஃபீக். வாகை சந்திரசேகர் முதலமைச்சரின் தோழன் தமிழ்வாணன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு.;
முதலமைச்சரை கொன்றுவிட்டு அந்த பதவியை கைப்பற்ற நினைக்கும் மூத்த அரசியல்வாதியிடமிருந்து முதலமைச்சரை காப்பாற்றும் நாயகன். இந்த வழக்கமான கதையை முற்றிலும் ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்லியுள்ள திரைப்படம் மாநாடு. ஏராளமான ஆங்கிலப்படங்களில் வரும் டைம் லூப் என்ற அடிப்படையை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்து புதிய முறையில் உருவாக்கியுள்ளனர்.
கதை.:
அப்துல் கலீக் துபாயிலிருந்து ஊட்டியில் நடைபெறவிருக்கும் ஜரீனாவின் திருமணத்திற்காக கோவைக்கு 10-10-2019 அன்று விமானத்தில் வருகின்றான். அவனுடன் விமானத்தில் ஜரீனாவை திருமணம் செய்யும் மாப்பிள்ளையுடன் பணிபுரியும் சீதாலக்ஷ்மியும் வருகின்றார். அங்கே விமான நிலையத்தின் கூரையில் கண்ணாடி விழுகின்றது. அதிஷ்டவசமாக ஒரு குழந்தை தப்பிக்கின்றது. இருவரும் ஒரே கல்யாணத்திற்கு செல்வதால் சேர்ந்தே செல்லலாம் என்று சீதாலக்ஷ்மியிடம் சொல்கின்றான் அப்துல்கலீக். அவனுடன் வர ஒத்துக்கொள்கின்றாள் சீதாலக்ஷ்மி. அப்துல் கலீக் நண்பன் சையது பாஷா காரை ஓட்டிச்செல்கிறான். அவனுடன் நண்பன் ஈஸ்வர மூர்த்தியும் இருக்கிறான். நால்வரும் காரில் திருமணத்திற்கு செல்லும் வழியில் ஆளும் கட்சியின் பிரம்மாண்ட மாநாடு கூட்டம் சார்ந்த போஸ்டர்கள் கட்அவுட்கள் தென்படுகிறது. அவர்கள் செல்லும் பாதையில் அரசியல்வாதியும் முதலமைச்சர் அறிவழகனின் தோழனுமான தமிழ்வாணன் விபத்தில் இறந்துவிட்டதாக சொல்லி மாற்றுப்பாதையில் செல்ல போக்குவரத்து காவல்துறையினர் சொல்கின்றனர். திருமணத்திற்கு செல்லும் அவர்கள் சீதாலக்ஷ்மிக்கே தெரியாமல் அவர் மூலம் ஜரீனாவை கடத்துகின்றனர் அப்துல் கலீக், பாஷா மற்றும் ஈஸ்வர மூர்த்தி. ஜரீனாவும் ஈஸ்வர மூர்த்தியும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். ஜரீனாவின் திருமணத்தை தடுத்து ஈஸ்வர மூர்த்திக்கு திருமணம் செய்து வைக்கவே ஜரீனாவை கடத்துகின்றனர். பதிவுத்திருமணம் செய்ய உதக மண்டலம் செல்லும் வழியில் ரஃபீக் என்பவனை காரில் அடித்துவிடுகின்றனர். உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ரஃபீக்கை காரில் ஏற்றிக்கொண்டிருக்கும் போது அங்கே இன்ஸ்பெக்டர் ஜான் வருகின்றார். அவர்களை விசாரணை செய்து கொண்டிருக்கும் போது அங்கே வருகின்றார் போலிஸ் கமிஷ்னர் தனுஷ்கோடி. அனைவரையும் கைது செய்து அழைத்து செல்கின்றார். அப்துல் கலீக்கை எதற்கோ தயார் செய்ய சொல்கின்றார் தனுஷ்கோடி. அப்துல் கலீக் உடையை மாற்ற சொல்கின்றனர். அவருக்கு பத்திரிக்கையாளர் என்ற அடையாள அட்டையை தயார்படுத்துகின்றனர். அவனுக்கு தீவிரவாத முத்திரையை உருவாக்குகின்றனர். மாநாடுக்கூட்டத்திற்கு கலீக்கை கூட்டிப்போகின்றான் இன்ஸ்பெக்டர் ஜான். கலீக்கிடம் புளூடூத் ஹெட் போனை கொடுத்து அதில் வரும் உத்தரவை பின்பற்றி அதன்படி செய்ய சொல்கிறான். முதலமைச்சருக்கு முன் சென்று பையில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து சுட சொல்கிறான். மறுத்தால் அவன் நண்பர்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறான் தனுஷ்கோடி. வேறு வழியில்லாமல் துப்பாகியால் சுடுகிறான். அப்போது தோட்டா எதுவும் அவன் துப்பாகியிலிருந்து போகவில்லை. ஆனால் முதலமைச்சர் அறிவழகன் சுடப்பட்டு இறந்து போகின்றார். அங்கே இருக்கும் இண்ஸ்பெக்டர் ஜான் மற்றும் போலிஸ் அதிகாரிகள் கலீக்கை சுடுகின்றனர். அவன் இறந்து போகின்றான்.
ஆனால் கலீக் கண்னைதிறந்து பார்க்கிறான், அவன் விமானத்தில் சீதாலக்ஷ்மி அருகில் அமர்ந்திருக்கின்றான். மீண்டும் முதல் காட்சியே நடக்கின்றது. அனைத்தும் எதோ கனவு போல் இருக்கின்றது. முன்பு வழியில் கண்ட காட்சிகள் அனைத்தும் மீண்டும் நடக்கின்றது.
தங்கள் முயற்சியாலேயே ஜரீனாவை கடத்திக்கொண்டு முன்பு சென்ற வழியிலேயே கவனமுடன் செல்கின்றான். ரஃபீக் மீது விபத்து நடந்த இடத்திற்கு வரும் போது முன்பைவிட மெதுவாக வருகின்றான். இப்போது ரஃபீக் மீது மோதி விபத்து எதுவும் நடக்கவில்லை. ஆனால் ரஃபீக் இவர்களது வண்டியில் ஏறி முதலமைச்சரை கொல்லப்போகின்றனர், என்னை காப்பாற்றுங்கள் என்று சொல்கிறான். போலிஸ் வருவதை தெரிந்து அங்கிருந்து தப்பி செல்கின்றான். தனுஷ் கோடி கலீக், பாஷா, ஈஸ்வர மூர்த்தி மற்றும் ஜரீனாவை கைது செய்கின்றனர். மீண்டும் கலீக்கை கொலைகாரனாக தயார்படுத்துகின்றனர். கலீக் கொலை செய்ய மறுக்கும் காரணத்தால் ஈஸ்வரமூர்த்தியை சுட்டு கொல்கின்றார் தனுஷ்கோடி. வேறுவழியில்லாமல் முதலமைச்சரை கொல்ல மாநாடு கூட்டத்திற்கு செல்கிறான் கலீக். தன் துப்பாகியால் முதலமைச்சர் இறக்கமாட்டார் என்பதை முன்பே தெரிந்த கலீக் பின் எப்படி இறக்கிறார் என்று கவனிக்கின்றான். ஒரு வாடகை கொலையாளி உயரத்திலிருந்து ஸ்னைஃபர் துப்பாக்கியால் சுடுவதை கவனிக்கிறான். மீண்டும் கலீக் சுடப்பட்டு இறக்கிறான்.
கலீக் கண்னைதிறந்து பார்க்கின்றான் அவன் மீண்டும் விமானத்தில் சீதாலக்ஷ்மி அருகில் அமர்ந்திருக்கின்றான். மீண்டும் முதல் காட்சியே நடக்கின்றது. அனைத்தும் எதோ கனவு போல் இருக்கின்றது. முன்பு வழியில் கண்ட காட்சிகள் அனைத்தும் மீண்டும் நடக்கின்றது.
இப்போது நடந்த நிகழ்வுகளை சீதாலக்ஷ்மி மற்றும் நண்பர்களிடம் சொல்கின்றான்.
அப்போது சீதாலக்ஷ்மி இது போன்ற நிகழ்வுகள் பழங்காலத்திலும் நடந்துள்ளதாக சொல்கிறாள். விக்ரமாதித்தியன் வேதாளம் கதையும் அதன் அடிப்படைதான் என்று சொல்கிறாள். குறிப்பாக உஜ்ஜயினி காலபைரவர் இந்த மாதிரி அதிசயங்களை நிகழ்த்துவார் என்று சொல்கிறார். அப்போது கலீக் நானும் உஜ்ஜயினி காலபைரவர் கோயிலில் பிறந்தவன்தான் என்று சொல்கிறான். ஒரு மதக்கலவரத்திலிருந்து காப்பாற்ற பிரசவ வேதனையிலிருந்த தன் தாயை ஒரு இந்து பெண் காலபைரவர் கோயிலில் தஞ்சமைடைய வைத்ததாகவும் அங்கே கலீக் பிறந்ததாகவும் சொல்கின்றான். இந்த சக்தியை கொண்டு கொல்லப்படவிருக்கும் முதலமைச்சரை காப்பாற்ற வேண்டுமென்று சொல்கின்றான் கலீக்.
மீண்டும் முதலமைச்சரின் மாநாட்டிற்கு செல்கின்றான் கலீக். முதலமைச்சரை கொன்றுவிட்டு தப்பி செல்லும் கொலையாளியை பின் தொடர்கின்றான். அங்கே சண்டை போட்டு அவன் தங்கியிருக்கும் அறை எண்ணை வாங்குகின்றான். அப்போது ஒரு அடியாளால் கொல்லப்படுகின்றான் கலீக்.
மீண்டும் வந்து கொலையாளி இருக்கும் அறைக்கு சென்று அவன் அமைச்சரை கொல்லும் முன் அவனை கடத்தி ரூமில் அடைக்கின்றான். இப்போது எப்படி கொல்வார்கள் என்று பார்க்க மாநாட்டிற்கு செல்கின்றான். அங்கே முதலமைச்சர் சுட்டுக்கொல்லப்படாமல், செல்லும் போது பாம் வெடித்து இறக்கின்றார். இதை அடிப்படையாக வைத்து மதக்கலவரத்தை உருவாக்குகின்றான் தனுஷ்கோடி. அப்போது தனுஷ்கோடியை சந்திக்கும் கலீக் மீண்டும் சந்திப்போம் என்று அவன் கண்முன்னே தன்னையே சுட்டுக்கொள்கிறான்.
கலீக்கிற்கு எப்படி இப்படி பிரச்சனையிருக்கின்றதோ அதே அடிப்படையை தனுஷ்கோடியும் உணர்கிறான். மீண்டும் மீண்டும் நடந்த நிகழ்வுகளே நடந்து கொண்டிருப்பதை உணர்கிறான். அனைத்து நிகழ்விலும் இருக்கும் அப்துல் கலீக்தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறான். அப்துல் கலீக் என்ன செய்வான் என்று தெரிந்து தனுஷ்கோடி அவனை குழப்புகின்றான். ரஃபீக்கை வைத்து முதலமைச்சரை கொல்வதற்கு பதில் கலீக்கையே கொல்ல வைக்கின்றான். ஒரு கட்டத்தில் முதலமைச்சரை கொல்லாமல் கூட்டத்தில் வெடிகுண்டை வெடிக்கச்செய்து அதன் அடிப்படையில் மதக்கலவரத்தை உருவாக்க முயல்கின்றான். அங்கே மீண்டும் கலீக் இறந்து நிகழ்வு தொடர்கின்றது. அதே வேளை, ஒவ்வொரு முறை கலீக் இறக்கும் போதும் மீண்டும் மீண்டும் நிகழ்வுகள் தொடர்கிறது என்பதை உணர்கிறான் தனுஷ்கோடி. தனுஷ்கோடி ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர் பதவி ஆசை கொண்ட பரந்தாமன் தான் தனுஷ் கோடியின் மூலம் முதலமைச்சரை கொன்று பதவிக்கு வர துடிக்கின்றான். முதலமைச்சரின் தோழர் இந்து மத கட்சின் தலைவரான தமிழ்வாணனை சந்திக்கும் பரந்தாமன் தான் முதலமைச்சரை கொன்று பதவிக்கு வர உதவுமாறு சொல்கின்றான். ஆனால் தமிழ்வாணன் முடியாது என்று சொல்கின்றார்.
குழப்பத்திலிருக்கும் கலீக்கிற்கு இது தெரிகிறது. மாநாடு நடக்காமல் தடுக்க முதலமைச்சரின் மகனிடம் சென்று முதலமைச்சர் கொல்லப்படவிருக்கும் செய்தியை சொல்கிறான் கலீக். ஆனால் அவர் இதை நம்பாமல் உதாசினப்படுத்துகிறார். எதற்கும் அதை என்னவென்று பார்க்குமாறு பரந்தாமனிடமே சொல்கின்றார். பரந்தாமன் கலீக், சீதாலக்ஷ்மி மற்றும் நண்பர்களை கடத்தி கொல்லப்போகிறான். கலீக்கை விசாரிக்கும் போது அவனை அனுப்பியது தனுஷ்கோடிதான் என்று சொல்கிறான். பரந்தாமனுக்கு தனுஷ்கோடி மீது சந்தேகம் வருகிறது. காரணம் கலீக்கை கொல்ல முயலும் போது தனுஷ்கோடி தடுப்பது தான். கலீக் இறந்தால் முதலமைச்சரை கொல்ல முடியாது என்று பரந்தாமனிடம் சொல்கிறான் தனுஷ்கோடி. அப்துல் கலீக்கை உயிரோடு கட்டிவைத்து விட்டு மாநாட்டில் முதலமைச்சரை கொல்ல செல்கிறான் தனுஷ்கோடி. ஆனால் மீண்டும் தன் உயிரை மாய்த்துக்கொண்டு நிகழ்ச்சியை மறுபடியும் தொடர்கின்றனர்.
ஒரு நிகழ்வை நினைவு கூர்கின்றான். முதலமைச்சரின் தோழர் விபத்தில் இறந்தது மனதிற்குள் வருகின்றது. எப்படியாவது தமிழ்வாணனை காப்பாற்ற வேண்டுமென்று முயல்கிறான். தமிழ்வாணனை காப்பாற்றி அவர் மூலம் தான் முதலமைச்சரை கலீக் காப்பாற்ற போகிறான் என்பதை தெரிந்து. தமிழ்வாணனை எப்படியும் கொல்ல வேண்டுமென்று முயற்சிக்கின்றான் தனுஷ்கோடி. அதே வேலை கலீக்கை மீண்டும் சாகவிடக்கூடாது என்று முயற்சிக்கிறான்.
தமிழ்வாணனை காப்பாற்றி கடத்தி செல்கின்றான் கலீக். அப்போது நடைபெறப்போகும் நிகழ்வுகள் அனைத்தையும் தமிழ்வாணனிடம் சொல்கிறான் கலீக்.
தமிழ்வாணன் மூலம் முதலமைச்சரிடம் இதை சொல்கிறான் கலீக். பரந்தாமன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் முதலமைச்சர் இதை நம்ப மறுக்கிறார். தனுஷ்கோடி மற்றும் பரந்தாமன் முதலமைச்சரை பார்க்க செல்கின்றனர். அங்கே முதலமைச்சர் அறிவழகன் மற்றும் அவரது மகன் மட்டுமே இருக்கின்றனர். பரந்தாமனை சோதிக்க தனக்கு நெஞ்சுவலி மாநாட்டுக்கு வர முடியாது என்று சொல்கின்றார் அறிவழகன். ஆனால் எப்படியாவது முதலமைச்சரை மாநாட்டுக்கு வரவழைக்க முயல்கின்றனர் பரந்தாமனும் தனுஷ்கோடியும். என்ன, மாநாட்டுக்கு வந்தால் தான் என்னை கொல்லமுடியும் அதனால தான் பரந்தாமன் நிர்ப்பந்திப்பதாக பரந்தாமனிடம் சொல்கின்றார் அறிவழகன். அப்போது மறைந்திருக்கும் கலீக் வெளியில் வருகிறான். வேறு வழியில்லாமல் பரந்தாமன் உன்னை கொன்று முதலமைச்சராக வேண்டும் என்பதே என் இலக்கு என்று சொல்கின்றான். தனுஷ்கோடி இங்கே இவர்களை கொன்று பழியை கலீக் மீது போட்டாலும் மாநாட்டில் கொலை செய்து சாதிக்க வேண்டியதை இங்கேயே செய்யலாம் என்று சொல்கிறான். அப்போது கலீக் அறிவழகனையும் அவரது மகனையும் சண்டை போட்டு காப்பாற்றுகிறான். முதலமைச்சரின் பாதுகாவலர்கள் தனுஷ்கோடியை சுட்டு கொல்கின்றனர். பரந்தாமனையும் கொல்கின்றனர். ஆனால் பரந்தாமன் துரோகியாக இறந்தால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுமென்று எண்ணி பரந்தாமன் உடல் நல கோளாறு காரணமாக இறந்ததாக சொல்கின்றனர்.
முதலமைச்சரை காப்பாற்ற நடந்த போராட்டத்தில் அடிபட்ட அப்துல் கலீக்கை மருத்துவமனையில் சந்தித்து முதலமைச்சர் அறிவழகன் நன்றி சொல்கின்றார்.
பாராட்டுக்குறியவை.:
ஆங்கிலப்படங்களில் இந்த அடிப்படையில் ஏராளமான படங்கள் வந்துள்ளன. தமிழுக்கு ஒரு புதுவகை திரைக்கதை.
டைம் லூப் அடிப்படையிலிருந்து சற்று மாறுப்பட்ட அடிப்படை. டைம் லூப் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும் நிகழ்வுகள் திரும்ப திரும்ப நடக்கும். இந்த படத்தில் ஆரம்பிக்கும் இடம் ஒன்றாக இருக்கின்றது. அதே வேலை முடிவு என்பதை மரணத்தில் வைத்துள்ளனர். அதவாது மரணம் நிகழ்ந்த பின் மீண்டும் ஆரம்ப புள்ளியிலிருந்து திரும்ப தொடங்கும்.
கதாநாயகனுக்கு அந்த அடிப்படை இருக்கும் போது திரைக்கதைக்கு வலுசேர்க்க வில்லனுக்கும் அந்த அடிப்படையை உணர்வது திரைக்கதையை மேலும் விறுவிறுப்பாக்க உதவுகின்றது.
நாயகன் அப்துல் கலீக்காக நடித்திருக்கும் T R சிலம்பரசனுக்கு இது ஒரு புதுவகையான திரைக்கதை படமாக இருக்கிறது. அதற்கேற்ப நடிக்கவும் வாய்ப்பு இருக்கின்றது.
ஒட்டு மொத்த திரைப்படத்திலும் வரும் அனைத்து காட்சியிலும் கைத்தட்டல் வாங்குகிறார் தனுஷ் கோடியாக நடித்துள்ள S J சூர்யா. இவரின் நடிப்பு படத்தை பிரமாண்டப்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல.
யுவன் சங்கர் ராஜா வழக்கம் போல் பின்னனி இசையில் அசத்தியுள்ளார்.
கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோ படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரின் கதாப்பாத்திரம் நினைவில் நிற்கும். காரணம் ஒவ்வொரு முறை டைம் லூப் தொடங்கும் போதும், இவரையும் வைத்தே தொடங்குவது தான்.
ஒரு சில காட்சிகளை ஒரு முறைக்கு இரு முறை பார்த்தால் மட்டுமே புரியும். குறிப்பாக ஒரு சண்டைக்காட்சியில் இறந்து இறந்து தொடர்வது போன்ற அடிப்படை. சண்டை காட்சி புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தாலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அடிப்படை. காரணம் டைம் லூப் தொடக்கம் விமானத்தில் தான் தொடங்கும். ஆனால் மீண்டும் மீண்டும் அதை காட்டினால் சலிப்பாக இருக்கும் என்பதால் ஒரே காட்சியில் தொடர் காட்சியாக இந்த சண்டை அமைந்துள்ளது. எளிதில் புரியும் அடிப்படையில் இல்லை என்றாலும் அருமை.
வெங்கட் பிரபு ஒரு ஆங்கிலப்படத்தின் அடிப்படையை தமிழுக்கேற்ப அழகாக திரைக்கதையமைத்து இயக்கியுள்ளார்.
நெருடலானவை.:
பெரும்பாலும் ஒரு அறிவியல் புனைவை இந்த மாதிரியான புனைக்கதைக்களுக்கு முன்னெடுப்பார்கள். ஆனால், அம்புலிமாமா கதை அடிப்படையை இதற்கு விளக்கமாக கொடுத்திருப்பது நெருடலாக இருக்கின்றது.
முதல்பாதியில் திரும்ப திரும்ப காட்சிகள் வருவது திரைக்கதையில் கொஞ்சம் சலிப்பை கொடுத்தாலும். அதற்கு இணையாக வில்லன் கதாப்பாத்திரத்தை காட்டியபின்தான் திரைக்கதை வேகமெடுக்கின்றது.
நாயகனுக்கு இருக்கும் சக்தி வில்லனுக்கும் இருப்பது போன்ற அடிப்படை, காதுல பூ என்றாலும் படத்தின் ஓட்டத்தில் இந்த லாஜிக் மீறல் மறந்து போகிறது.
ஆங்கிலப்படத்தின் அடிப்படை தமிழுக்கேற்ப அழகாக கொடுத்திருந்தாலும் மக்களுக்கு இந்த அடிப்படையை ஏற்க்கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கும். அதுவும் இதே அடிப்படையிலான ஜாங்கோ திரைப்படம் இப்போது தான் வெளியாகியிருக்கிறது. ஒப்பீட்டளவில் மாநாடு மிகச்சிறந்த திரைப்படம் தான்.
தொகுப்பு.:
சுரேஷ்காமாட்சி, வெங்கட்பிரபு, T R சிலம்பரசன் மற்றும் S J சூர்யா கூட்டனியில் மாநாடு வெற்றிகரமாக அமைந்து ரசிகர்களின் ஆட்சி கட்டிலை பிடிக்கும்.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.