Article by : Admin on 18-09-2021
S.K புரெக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் மற்றும் KJR ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர். தற்போது நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கின்றார். அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். R.நிர்மல் படத்தை தொகுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் முதன் முதலாக தமிழிலில் நாயகியாக அறிமுகமாகின்றார். இவர்களுடன் வினய்ராய், யோகிபாபு, மிலிந்த சோமன், இளவரசு, காமெடி டைம் அர்ச்சனா, ஜாரா வினீத் (அர்ச்சனா மகள்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டாக்டர் பணிகள் முடிவடைந்து நீண்ட நாட்களாக வெளியீட்டுக்காக காத்திருக்கின்றது. முதல் கட்ட ஊரடங்குக்கிற்கு முன் வெளிவரவேண்டி படம் பல கட்ட ஊரடங்கு காரணமாக வெளியீடு தள்ளிக்க்கொண்டே சென்றது. இந்த படம் ஒடிடியில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. ஆனால் பல தடைகளை கடந்து இதன் வெளியீட்டு தேதியை சிவகார்த்திகேயன் தன் டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்
டாக்டர் திரைப்படம் 09.10.2021 முதல் திரையரங்குகளில் வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
See you in theatres #DoctorFromOct9#Doctor pic.twitter.com/FO3tXWvEvy
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 18, 2021
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.