Article by : Sankar on 27-06-2021
16 நாடுகள் பங்கேற்கும் T20 உலகக் கோப்பை 2021 ICC வெளியிட்டது. 18-October-2021 ஆரம்பமாகும் இந்த உலகக்கோப்பை போட்டிகள் 15-November-2021 இறுதி போட்டியோடு நிறைவடைகிறது. இது மூன்று சுற்றுகளாக நடைபெற உள்ளது.
முதல் சுற்று போட்டிகள் உலக தரவரிசை பட்டியலில் 9 முதல் 16 வரை உள்ள நாடுகளுக்கிடையே நான்கு அணிகளை தேர்ந்தெடுக்கும் போட்டிகளாக நடைபெறவுள்ளது. இவை சுழற்சி முறை (League) போட்டிகளாக நடைபெறவுள்ளன. இதில் A B என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெறவுள்ளது, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். A பிரிவில் Sri Lanka, Papua New Guinea, Ireland, Oman ஆகிய நாடுகளும் B பிரிவில் Bangladesh, Namibia, Netherlands, Scotland ஆகிய நாடுகளும் போட்டியிட உள்ளன.
இரண்டாம் சுற்று போட்டிகள் சூப்பர் 12 (Super 12) என்றழைக்கப்படுகின்றன. இவையும் சுழற்சி முறை (League) போட்டிகளாக நடைபெறவுள்ளன. இதில் Grouop 1 மற்றும் Group 2 என இரண்டு பிரிவுகளாக 12 நாடுகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறா உள்ளது. Group 1 ல் Australia, Pakistan, New Zealand, West Indies, A பிரிவில் முதலிடம் பிடித்த அணி, B பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த அணி என ஆறு அணிகளும் Group 2 ல் India, South Africa, Afganistan, England, B பிரிவில் முதலிடம் பிடித்த அணி மற்றும் A பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த அணி என ஆறு அணிகளும் போட்டியிட உள்ளன. இதில் ஒவ்வொரு Group லும் முதலிடம் பிடிக்கும் இரு அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு செல்லவிருக்கின்றன.
மூன்றாம் சுற்றான அரையிறுதி சுற்று தகுதிச் சுற்று (Knockout) போட்டிகளாக நடைபெறும். இதில் சூப்பர் 12 ல் இரு பிரிவுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு அணிகள் பங்கேற்கும். அரையிறுதிச்சுற்று இரண்டு போட்டிகளிலும் வெல்லும் இரண்டு அணிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டி 15-November-21 அன்று நடைபெறும்.
அனைத்து அணிகளுக்குமான போட்டி அட்டவணையை ICC வெளியிட்டது. அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.